த.தே.ம.முன்னணியின் கல்வி மேம்பாட்டுத்துறையால் நிர்வகிக்கப்படும் கல்விநிலையங்கள்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டுத்துறையால் நிர்வகிக்கப்படும் வவுனியா வடக்கிலுள்ள கல்விநிலையங்களான
1.குறிசுட்டகுளம்- நிதி உதவி திரு.சி.தாமரைச்செல்வன்,

2.கனகராயன் குளம் தெற்கு-நிதி உதவி அம்மா உணவகம் பேர்லின் ஜேர்மன், 3.விஞ்ஞானங்குளம்-நிதி உதவி | முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணன்,
4.பெரிய குளம்- நிதி உதவி உறங்காவிழிகள்-கனடா ஆகியவற்றிலே கற்கின்ற நூற்றி நான்கு(104)மாணவர்களுக்கான  புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் முன்னணியின் முல்லைமாவட்டச்செயலாளர் திலகநாதன் கிந்துஜன் அவர்களது ஒழுங்குபடுத்தலில் இன்று மாலை  வழங்கப்பட்டது.  ஜேர்மனியிலுள்ள ஸ்ரீ  வீரசித்தி விநாயகர் ஆலயத்தினரது நிதி உதவியுடன் தொண்ணூற்று மூன்று(93)மாணவர்களுக்கான புத்தகப்பைகளும் ஜேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தினரது நிதி உதவியுடன் பதினொரு(11) புத்தகப்பைகளும் வழங்கிவைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வில் குறிசுட்டகுளம் பாடசாலை ஆசிரியர்கள், எமது அறிவொளி கல்வி நிலைய ஆசிரியர்கள், விஞ்ஞானங்குளம் நவரத்தினா வித்தியாலய அதிபர், வவுனியா வடக்குப்பிரதேச சபை உறுப்பினரும் கனகராயன்குளம் தெற்கு ஒருங்கிணைப்பாளருமான திரு.தி.விஜீகரன்,  கனகராயன் குளம் தெற்கு செயற்பாட்டாளர் திரு.வை.கருணாநிதி, கனகராயன் குளம் வடக்கு ஒருங்கிணைப்பாளர் திரு.பிரதீபன், பெரியகுளம் செயற்பாட்டாளர் திரு.சந்திரகுமார் ஆகியோருடன் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான  புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி  வைத்தார்கள்.

சிறந்த முறையில் காணொளி மற்றும் ஔிப்படங்களை எமது ஆவண வெளியீட்டுப்பிரிவைச்சேர்ந்த திரு.ஜேந்தன் மேற்கொண்டார்.

இச்செயற்பாட்டுக்கு பங்களித்த
அத்தனைபேருக்கும் மனமார்ந்த நன்றிகள்..

அறிவொளி கல்வி நிலையம்- கனகராயன்குளம் தெற்கு
30மாணவர்கள்

No comments

Powered by Blogger.