வட மாகாண பட்டதாரிகள் சிலருக்கு நாளை ஆசிரியர் நியமனம்
வடமாகாண பட்டதாரிகள் சிலருக்கு நாளைய தினம் (26) ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
வட மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையில், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம், தெரிவு செய்யப்பட்ட 249 பட்டதாரிகளுக்கு நாளை நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.
இரசாயனவியல், பௌதீகவியல், விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நாளை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக எஸ்.சத்தியசீலன் குறிப்பிட்டார்.
தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணத்துடன் அறிக்கையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் பாடரீதியாக www.np.gov.lk என்ற இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை