2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு பலாலி வானூர்தி நிலை­யத்­துக்கு !!

பலாலி வானூர்தி நிலை­யத்­தின் ஓடு­பா­தையை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு அரசு 2 பில்­லி­யன் ரூபாவை ஒதுக்­க­வுள்­ளது. இதற்­கான அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் அமைச்­சால், அமைச்­ச­ர­வைப் பணி­ய­கத்­துக்­குச் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது.


அடுத்த வாரம் நடை­பெ­றும் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் இது எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

சுற்­று­லாத்­துறை அமைச்சு ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா­வை­யும், சிவில் வானூர்தி மற்­றும் போக்­கு­வ­ரத்து அமைச்சு 960 மில்­லி­யன் ரூபா­வை­யும் இதற்­காக ஒதுக்­கி­யுள்­ளன.

பிராந்­திய வானூர்தி நிலை­யங்­க­ளுக்கு, குறிப்­பாக இந்­தி­யா­வுக்­கான வானூர்­திப் பய­ணங்­களை ஆரம்­பிப்­ப­தற்­கான முதல் நட­வ­டிக்­கை­யா­கவே, வானூர்தி ஓடு­பா­தையை அபி­வி­ருத்தி செய்­யும் நட­வ­டிக்கை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அபி­வி­ருத்­திப் பணி­கள் சிவில் வானூர்­தித் திணைக்­க­ளத்­தால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.