தீப்பிடித்து எரிந்த கார்கள்: மூன்று பேர் உடல் கருகி பலி!

தலைநகர் டெல்லியில் ஆனந்த் விகார் பகுதியில், இரு கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் அதில் பயணித்த மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இரண்டு கார்களும் தீக்கிரையாகின.


டெல்லி, ஆனந்த் விகார்,  ஷாதரா பகுதியில் உள்ள ஒரு மேம்பாலத்தில் புதன்கிழமை நள்ளிரவு இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் இரண்டு கார்களும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த தீவிபத்தில் சிக்கி அதில் பயணித்த மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.   

No comments

Powered by Blogger.