முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் இந்திய தேசிய இராணுவ வீரர்கள்பங்கேற்பு!


இந்தியாவின் 69ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் அணிவகுப்பு மரியாதையில் முதன்முறையாக இந்திய தேசிய (ஐ.என்.ஏ) இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 69ஆவது குடியரசு தினம் நாளை (சனிக்கிழமை)  டெல்லி ராஜ்பாத்தில் கொண்டாடப்படுகிறது.

இந்த குடியரசு தின விழாவில் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு விசேட மரியாதை அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது.

ராஜ்பாத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள  இந்த அணிவகுப்பில் முதன்முறையாக 98 முதல் 100 வயதுடைய 4 ஐ.என்.ஏ. வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.