உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது!

உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Y&R’s BAV மற்றும் Wharton ஆகியவற்றுடன் அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை இணைந்து நடத்திய இதுதொடர்பான ஆய்வின் நிறைவில், குறித்த பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது.

அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா, ஆபிரிக்க உள்ளிட்ட 80 நாடுகளிடம் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 65 விடயங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளுக்கும் புள்ளி வழங்குமாறு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

குடியுரிமை, கலாச்சார தாக்கம், முயற்சியான்மை, மரபுரிமைகள், வர்த்தகம், மின்வலு எரிசக்தி மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

உலகின் மிகச் சிறந்த நாடுகளின் வரிசையில் கனடா மூன்றாம் இடத்தை வகிப்பதுடன், உலகின் மிகச் சிறந்த வாழ்க்கை முறையைக் கொண்ட நாடுகளின் வரிசையில் முதலாம் இடத்தை வகிக்கின்றது.

கனடாவில் பல்வேறு இனங்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் 16வது பேசும் மொழியாக தமிழ் உள்ளமை விசேட அம்சமாகும்.

உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் சுவீடன் இரண்டாமிடத்தையும், டென்மார்க் மூன்றாமிடத்தையும் நோர்வே நான்காமிடத்தையும், சுவிட்சர்லாந்து ஐந்தாமிடத்தையும் பிடித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.