சந்திரலீலா மீது பொய்க்குற்றம் சுமத்தி நீதிமன்றுக்கு அலைக்கழித்த பொலிசார்-கேப்பாபிலவில் சம்பவம்!!

கடந்த மாதம் 31.12.2018 அன்று இராணுவ முகாமிற்கு முன் கேப்பாப்பலவு மக்கள் தமது காணிகளை விடச்சொல்லி போராட்டம் நடத்தியபோது அவ்விடத்திற்கு  உதவி அரசாங்கதிபர். மேலதிக அரச அதிபர் ஆகியோர் வந்து போராட்டம் நடத்திய மக்களுடன் கதைத்து இம் மாதம் 25ம் திகதிக்குள் தாம் சம்பந்தப்பட்டவர்களிடம் கதைத்து முடிவு தருவதாக கூறி போராட்டத்தை நிறுத்தியது யாவரும் அறிந்ததே.

இது இவ்வாறிருக்க நேற்று இரவு 8.00 மணியளவில் திருமதி சந்திரலீலாவின் வீட்டிற்கு சென்ற பொலீஸ் அதிகாரிகள் முல்லைத்தீவு நீதிமன்றத்திலிருந்து வந்ததாகக்கூறி நீதிமன்றக்கட்டளை ஒன்றை கொடுத்து நாளை காலை 9.00 மணிக்கு நீதிமன்றம் வரச்சொல்லி சென்றுள்ளனர்.
அக் கட்டளையில் குறிக்கப்பட்டுள்ள குற்றத்தின் தன்மை இராணுவ முகாமிற்கு முன் போராட்டம் செய்து இராணுவச் செயற்ப்பாட்டிற்கு பங்கம் விளைவித்தாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது..
கடந்த மாதம் 24.12.2018 அன்று சந்திரலீலாவின் கணவன் இறந்துவிட்டார். இதனால் இவர் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க பிழையான குற்றத்தை தாக்கல் செய்துள்ளார்கள் என்பதோடு தமது சொந்த நிலத்தைத்தான் தரச்சொல்லித்தான் 700 நாளையும் தாண்டி போராட்டம் செய்து வருகின்றோமே ஒழிய வேறு இராணுவத்தின் காணியை அல்ல என்பதோடு தனது கணவன் இறுதியாக கேட்டதும், எமது காணியை விடுவாங்களா ?.. என்பதே.  இந் நிலைப்பாட்டிலும் கூட நான் நீதிமன்றம் போகின்றேன் என்றும்,

முள்ளியவளை பொலிஸார் தமது வேலைசெயற்பாடுகளில் ஏற்படும் நெருக்கடியின் நிமித்தம் பொய் குற்றத்தினை தன்மீது சாட்டியுள்ளதோடு ஜனனாயகப்போராட்டத்திற்கு எப்போதும் தாம் தடைபோடமாட்டோம் என்று நீதியாளர் கூறியதோடு தன்மீது குற்றம் சுமத்தியதற்கு அங்கிருந்த சட்டவாளர்களும் பொலீசாரை பேசினார்கள் என்றும் நீதியாளர் சொன்னமாதிரி இராணுவத்தினருக்கு தொந்தரவில்லாது நாளை பெருமெடுப்பாக போராட்டம் செய்யப்போவதாகவும் சந்திரலீலா  கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.