பதவி ஆசை எனக்கில்லை!

நானோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களோ  பதவி ஆசை பிடித்தவர்கள் அல்ல.எதிர்க்கட்சி பதவி குறித்து நாம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்ப பதவி ஆசை காரணம் அல்ல.நாங்கள் ஒருபோதும் பதவிகளை நாடினவர்கள் அல்ல.


ஆனால் பேரினவாதத்தினை விதைக்கும் ஒரு சிலரின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அரசியல்  அமைப்பினையோ  ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் சாசன நடைமுறைகளையோ சாசனங்களையோ திரிவுபடுத்தி திசை திருப்புவதன் மூலம் சிறுபான்மை கட்சிகளினதும் சிறுபான்மை மக்களினதும் உரிமைகள் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

 சிறுபான்மை கட்சிகளிற்கும் சிறுபான்மை மக்களிற்கும் உள்ள உரித்தானது பாதுகாக்கப்பட்டு பேணப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் போராடி வருகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று காலை 27/2 இன் கீழ் விஷேட கூற்று எழுப்பி உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.   

No comments

Powered by Blogger.