விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களிடம் மருத்துவ அறிக்கை பெற்றுக்கொள்ள நடவடிக்கை!

பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களினதும் மருத்துவ அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


1500 மீட்டர், 3000 மீட்டர் ஓட்டப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்வது கட்டாயம் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் அதிபர்களுக்கு வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விளையாட்டுப் போட்டிகளுக்காக பயற்சிகளில் ஈடுபடும் போது, மாணவர்கள் தொடர்பில் ஆசிரியர்கள் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கடும் வெப்பம் நிலவும் சந்தர்ப்பங்களில் பயிற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பாடசாலை மாணவர்களை பரிசோதிப்பது தொடர்பில் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.