ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் மீதான தடை நீக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர்கள், ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, பெண்களைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும் போட்டிகளில் பங்கேற்க, பி.சி.சி.ஐ., தடை விதித்தது.


வீரர்களின் செயலுக்கு, ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்து, பலரும் குரல் கொடுத்தனர். இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் விசாரணை நடத்த, இந்திய கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டது.

இதற்கிடையே, பாண்டியா, ராகுல் மீதான இடைக்கால தடையை திரும்ப பெறுவதாக, பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. விசாரணை நிலுவையில் உள்ளதால், தடை விலக்கி கொள்ளப்படுவதாகவும், விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.