வெற்றிக்கு பின் சக்கரம் கட்டி விளையாடிய தோனி, கோலி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றியடைந்த உற்சாகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள், இந்நாள் கேப்டன்களான தோனி மற்றும் விராட் கோலி விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நியூசிலாந்து-இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், போட்டிக்கு பிறகு கேப்டன் விராட் கோலி, தோனி உள்ளிட்ட வீரர்கள் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர். ‘ஸெக்வே’ என்று அழைக்கப்படும், தனி நபரால் இயக்கக்கூடிய இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சவாரி செய்து அவர்கள் மகிழ்ந்தனர். முதலில் தோனி சவாரி செய்தார். பின்னர், அந்த வாகனத்தை இயக்கிய கோலி, உற்சாகத்தில் நடனமாடிக் கொண்டே பயணித்தார். 


அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

No comments

Powered by Blogger.