சங்கு வடிவம் கொண்ட சங்ககிரி மலைக் கோட்டை

சேலம் மாவட்டம் சங்கரியில்  அமைந்துள்ளது சங்ககிரி மலைக் கோட்டை.  வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டைக்கு  சங்ககிரி மலைக்கோட்டை என்று பெயர்வர காரணம் என்னவென்றால், இந்த கோட்டை சங்கு போன்ற வடிவம் கொண்டதாலேயே. 

இந்தக் கோட்டை 40 அடி உயரம், 10 சுற்றுப்புறச் சுவர்கள் , கோவில்கள், மசுதிகள், மற்றும் நடைபாதைகள் உள்ளன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை விஜயநகர அரசர்களால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோட்டையின் உயரம் 5 கி.மீ. ஆகும். சங்ககிரி மலைக்கோட்டை தமிழகத்தின் மிக உயரமான மலைக்கோட்டையாகும். மலை அடிப்பகுதியிலிருந்து உச்சி வரை இக்கோட்டையில் ஒன்பது வாயில்கள் உள்ளன. மலையிலுள்ள பாறைகள் மிக அழகான முறையில் செதுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் திப்பு சுல்தானால் இக்கோட்டைப் பலப்படுத்தப்பட்டது என ஆய்வாளரால் கருதப்படுகிறது.  
கோட்டையின் மூன்றாவது வாயிலில் வரதராசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இன்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. இக்கோவிலுள்ள கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தூண்கள் வேலைப்பாடு மிகுந்தவை. இக்கோவிலின் ஒருபகுதி இந்தியத் தொல்பொருள் துறையினரால் புணரமைக்கப்பட்டுள்ளது. இக்கோட்டையை ஆக்கிரமித்திருந்த திப்புசுல்தான் மற்றும் தீரன் சின்னமலை ஆகியோரின் ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் நகைகள் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பொருள்கள் இங்கு உள்ளது. இங்கு உள்ள 6ஆவது வாயில் அருகில் வெடிமருந்து வைப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. 5ஆவது வாயிலை அடுத்து படைவீரர்கள் தங்குமிடம் சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது. 5ஆம் 6ஆம் வாயில்களுக்கிடையில் இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலம் ஒன்றும் அதனருகில் மர்மமான சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது. 
கோட்டையின் உச்சியில் சென்ன கேசவப்பெருமாள் கோவில் உள்ளது. முக்கிய விழா நாட்கள் தவிர பிற நாட்களில் இக்கோவிலின் உற்சவர் மலை அடிவாரத்தில் வைக்கப்படுகிறார். மலையடிவாரத்தில் சோமேஸ்வரசுவாமி கோவில் ஒன்றும் உள்ளது.  அடுத்து அதன் அருகிலேயே இருக்கிறது வரதராஜ பெருமாள் கோவில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் புரட்டாசி மாதங்களில் சனிக்கிழமைகளில் மட்டும் பூஜை செய்யப்படுகிறது.  கோவிலின் கீழே ஒரு லிங்கம் போன்ற ஒரு உருவம் பாறையில் செதுக்கப்பட்டு அதன் அருகில் உருது மொழில் ஏதோ எழுதி இருந்தது.பாறையின் சரிவில், பாறையை ஒட்டி கீழே ஒரு தண்ணீர் பாலி இருக்கிறது. கீழே ஒரு சுவர் எழுப்பி, அங்கு தேங்கும் மலை நீரை அப்போது சேகரித்து வைத்து வந்துள்ளனர்.  
இப்பகுதியில் அதிகப்படியான மூலிகைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.  இங்கு கொங்குநாட்டு சிங்கமான தீரன் சின்னமலையை ஆங்கிலேயர்கள் 1805 ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோட்டையை ஆட்சி செய்தவரும் அவரே. தீரன் சின்னமலையின் இறப்புக்குப் பின் ஆங்கிலேயர்கள், இக்கோட்டையை ஆக்கிரமித்து தங்கள் தலைமையகமாக மாற்றினர். இக்கோட்டை இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் பாதுகாப்பில் உள்ளது.
200 வருடங்கள் பெருமை வாய்ந்த பகுதிகளைக்கூட பராமரிக்காமல் அழியும் தருவாயில் உள்ளது. பராமரிப்பு இல்லாமல் வரலாற்று புகழ் வாய்ந்த இக்கோட்டை தற்பொழுது சிதிலமடைந்துள்ளது. சங்ககிரி மலைக்கோட்டை ஒரு சுற்றுலாத் தலமாக்கப்பட வேண்டும்.  கேட்பாரற்று கிடக்கும் தீரன் சின்ன மலை தூக்கிலிடப்பட்ட அந்த இடத்தை நினைவிடம் ஆக்க வேண்டும்.  இந்த மலைக்கோட்டையின் வரலாற்றை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவை அனைத்தையும் சாத்தியப்படுத்த இந்த மலைகோட்டையை தற்போது கையகப்படுத்தி வைத்திருக்கும் தொல்பொருள்துறையால் மட்டுமே முடியும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.