'அசுரன்' ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் தனுஷ்!

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியார் நடிக்கும் அசுரன் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்ட்டர், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று மாலை வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த ஆண்டு வெளியான வடசென்னை, மெகாஹிட்டானது. வடசென்னையில் மேலும் இரண்டு பாகங்கள் உருவாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், வெற்றிமாறனுடன் தனுஷ் மற்றொரு படம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

'அசுரன்' என பெயரிடப்பட்ட அந்த படத்தை, கலைபுலி எஸ் தாணு தயாரிப்பதாகவும், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தில், முக்கிய வேடத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்க இருக்கிறார். அசுரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிடப்படும் என கூறியிருந்த நிலையில், மாலை 6 மணி அளவில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான போஸ்டர், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.