மாலி தாக்குதல் – இலங்கை இராணுவத்தினர் ஒருவரின் நிலை கவலைக்கிடம்
மாலியில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த இலங்கை இராணுவத்தினர் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபிரிக்க நாடான மாலியில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில், இலங்கை இராணுவத்தினர் இருவர் உயிரிழந்திருந்ததுடன், அறுவர் காயமடைந்திருந்தனர்.
காயமடைந்தவர்களை ஐ.நா. அமைதிப்படையில் உள்ள கனடிய விமானப்படையினர் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
இந்நிலையில் இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த தாக்குதலில் உயிரிழந்த இரு இராணுவத்தினரின் சடலங்கள் எதிர்வரும் புதன்கிழமை கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை