அவள் - கவிதை

அன்பில் உருவமவள்
அன்பின் தெய்வமவள்
இன்னல் நீக்குபவள்
இப்பிறப்பின் வரமவள்.

வம்புகள் செய்பவள்
வரம்புகளை மீறாதவள்
இம்மையும் காப்பவள்
இம்சை இராணியவள்.
கவிதைக் கருபவள்
கடவுள் குழந்தையவள்
தவிக்கும் பேதையவள்
தவமில்லாத வரமபவள்.
வானத்து நிலவுமவள்
வைகறைத் தென்றலவள்
கானகத்துக் குயிலவள்
கள்ளமில்லா உள்ளமவள்.
அண்டத்தின் எழிலவள்
அக்கறையில் தாயுமவள்
வண்ணத்து ஒளியவள்
வடிவான பெண்ணுமவள்.
சின்னஞ்சிறு சிட்டவள்
சிலையில்லாச் சிற்பமவள்
அன்னத்தின் தோழியவள்
அடர்காட்டின் வனப்புமவள்.
சுதேன் சுதேகி

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.