கேப்பாபுலவில் மக்களின் தொடர் நிலையில் நிலமீட்புப் போராட்டம்!

சிறீலங்கா அரசின் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தொடரும் கேப்பாபுலவு மக்களின் நிலமீட்புப் போராட்டம்.முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கேப்பாப்புலவு படைமுகாம் வாயிலில் ஆரம்பிக்கப்பட்ட முற்றுபை் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



காணி விடுவிப்பை வலியுறுத்தி இன்றுடன் 688 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  கேப்பாப்புலவு மக்கள், நேற்றிலிருந்து படைமுகாம் வாயிலில் முற்றுகைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

   அதன்படி இந்த முற்றுகைப் போராட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கின்றது.சிறீலங்கா இராணுவ முகாமுக்கு முன்பாக, பெண்களும் குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அத்தோடு இப்போராட்டத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த பொதுமக்களும், அருட்சகோதரிகளும் பொது அமைப்புக்களும் கலந்துகொண்டுள்ளனர்.

   கேப்பாப்புலவில் உள்ள தங்களது காணிகளை விடுவித்துத் தருமாறு வலியுறுத்தி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், கேப்பாப்புலவு பிரதேசத்தில் வசித்த 84 குடும்பங்களினால் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த விடயம் தொடர்பாக சிறீலங்கா சனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு, ஒரு மாதகால அவகாசம் வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் வாக்குறுதி வழங்கப்பட்டது.எனினும், வழங்கப்பட்ட வாக்குறுதிக்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதையடுத்து, படைமுகாம் வாயிலில் மக்கள் தமது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

   நேற்றைய தினம் கேப்பாபுலவு நுளைவாயிலில் இருந்து படைமுகாம் வரை ஊர்வலமாக சென்ற மக்கள் சிறீலங்கா படை முகாமிற்கு முன்னால் அமர்ந்து தங்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.இந்த போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள் பற்றி தகவல்களை திரட்டும் நடவடிக்கையில் சிறீலங்கா படைபுலனாய்வாளர்கள் மற்றும் பொலிசார் ஈடுபட்ட அதேவேளை மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

   முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் மக்கள் சனநாயக வழியில் போராட்டத்தினை முன்னெடுக்க அனுமதி வழங்கியிருந்த நிலையிலும் அதிகளவான சிறீலங்கா பொலீசார் மற்றும் படைபுலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலீசார் மக்களை கட்டுப்படுத்த மறைமுக சதி நடவடிக்கையினை தொடர்ந்துள்ளார்கள்.இந்நிலையில் படையினரின் முகாம் வாசலில் இருந்து மக்களை அப்புறப்படுத்துவதற்காக பொலிசார் பல்வேறு பிரயத்தன முயற்சியினை மேற்கொண்டு வந்த நிலையில் போராட்ட மக்கள் தங்கள் போராட்டங்களை கைவிடாத நிலையில் பொலீசார் நீதிமன்றத்தினை நாடியுள்ளார்கள்.

   மக்களின் போராட்ட நடவடிக்கை படையினருக்கு இடையூறை ஏற்படுத்துவதாக தெரிவித்து போராட்டம் நடத்திய மூவர் மீது வழக்கு பதிவு செய்து போராட்ட காரர்களை படைமுகாமிற்கு முன்னால் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கு இணங்க நீதிமன்றத்தை நாடிய பொலிசாருக்கு நீதிபதி அவர்கள் போராட்ட காரர்கள் படைமுகாமில் இருந்து 75 மீற்றருக்கு அப்பால் போராட்டத்தில் ஈடுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிசாரால் குற்றம் சாட்டப்பட்ட கேப்பாபுலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த வி.இந்திராணி, மனித உரிமை செயற்பாட்டாளர் க.சந்திரலீலா,நீர்கொழும்பினை சேர்ந்த யோ.விறிட்டா பெர்னாண்டோ ஆகியோர் மீது 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவையின் பரிவு 106(01)ன் கீழாக முள்ளியவளை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதன்படி குறிப்பட்ட நபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி நீதவான் நீதிமன்றில் சமூகமளிக்குமாறு கட்டளைபிறப்பிக்கப்பட்டுள்ளது.

   இவ்வாறான நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கேப்பாபுலவு படைமுகாமில் இருந்து 75 மீற்றர் தூரம் பொலீசாரால் அளந்து அடையாளாப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதனை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்கள். நேற்றய தினம் சனிக்கிழமை இந்நாளில் நீதிமன்ற வெளியக செயற்பாடுகள் எதுவும் நடைபெறுவதில்லை. ஆனபோதிலும் சிறீலங்கா பொலிசார் இராணுவத்திற்கு சார்பாக இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

   இந்நிலையில் போராட்ட காரர்கள் இரவு தமது போராட்டத்தனை இராணுவ முகாமில் இருந்து 75 மீற்றர் தூரத்திற்கு அப்பால் தொடர்ந்த வண்ணமுள்ளனர்.இதேவேளை கேப்பாபுலவு நிலமீட்டுபு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் தகவல்களையும் படைபுலனாய்வாளர்கள் தீவிரமாக விசாரரித்து வருகின்றார்கள்.போராட்டம் நடத்து மக்கள் மீது வழக்குதொடர்வதன் ஊடாக மக்களின் போராட்ட சக்தியினை முடக்கி அவர்களின் போராட்டத்தினை நீக்கடிக்க செய்யும் சதி நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  அண்மையில் முல்லைத்தீவிற்கு வருகைதந்திருந்த சிறீலங்கா சனாதிபதி மைத்திரிபால சிறிசேன போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கண்டும் காணாதது போல உதாசீனம் செய்து சென்றிருந்தார்.நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தாகத்தில் தவித்த போதும் அவர்கள் தங்களிடம் இருக்கும் நீரை எடுக்கவிடாது இராணுவம் தடுத்திருந்தது இதே வேளை முன்னைய நாட்களில் இராணுவம் மக்களுக்கு பொருட்களை வழங்கி புகைப்படம் எடுத்து பிரச்சாரங்களை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இரவு மக்கள் போராட்ட இடத்தில் இருந்தபோது இராணுவமுகாமின் வளாகத்திலும் வீதியிலுமுல்ல மின் விளக்குகள்  அணைக்கப்பட்டது. அதன் பின் போராட்டமக்கள் குப்பி விளக்கின் உதவியுடன் இரவு வேளையை கழித்துள்ளனர்.

  எந்த நிலமையிலும் எமது நிலம் விடும்வரை நாம் இப்போது இருக்கும் இடத்திலிருந்து தொடர்ந்து போராடுவோம் எனவும் சர்வதேசமும், புலம்பெயர் உறவுகளும்  இந்த உண்மைகளை உணர்ந்து எமக்காக குரல்கொடுத்து எமது காணியை மீட்க உதவவேண்டும் என கேப்பாப்புலவு மக்கள் வேண்டுகிறார்கள்....

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.