இதோ குப்பி விளக்கு அருகில் குந்தி இருக்கிறதே ஒரு குழந்தை இதுவும் தமிழ் குழந்தைதான்!

இந்த குழந்தை

அமைச்சர் விஜயகலாவின் குழந்தைபோல் தனக்கு ஜனாதிபதி தலைமையில் அரங்கேற்றம் வேண்டும் என்று கேட்கவில்லை


சரவணபவன் எம்.பி யின் மகள் போன்று ஜனாதிபதி தலைமையில் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று கேட்கவில்லை

சிறீதரன் எம்.பி யின் பிள்ளைகள் போன்று யாழ்ப்பாணம் சென்று படிக்க வேண்டும் என்று கேட்கவில்லை

மாவை சேனாதிராசாவின் பிள்ளைகள் போன்று இந்தியா சென்று படித்துவிட்டு பிரதேசசபை உறுப்பினராக வேண்டும் என்று கேட்கவில்லை

சுமந்திரன் பிள்ளைகள் போன்று லுண்டன் சென்று படிக்க வேண்டும் என்றும் கேட்கவில்லை.

சம்பந்தர் அய்யாவின் பிள்ளைகள் போன்று இரண்டு சொகுசு பங்களாவில் வாழ வேண்டும் என்றும் கேட்கவில்லை.

இந்த குழந்தை கேட்பதெல்லாம் தான் நிம்மதியாய் படுத்து உறங்க தன் சொந்த நிலத்தை தரும்படியே.

இவர்களிடம் ஓட்டு வாங்கி தம் பிள்ளைகளை வசதியாக வாழ வைத்துக்கொண்டிருக்கும் நம் தமிழ் தலைவர்கள் இந்த குழந்தையை வாழ வைக்க வேண்டும் என்று தோன்றவில்லையே!

குறிப்பு- கேட்பாபுலவில் தமது சொந்த நிலத்தை கேட்டு போராடும் குழந்தைகளுக்கு அவர்களின் நிலம் கிடைக்க குரல் கொடுப்போம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.