மூடப்­பட்ட விடுதி மீளத் திறப்பு!

முல்­லைத்­தீவு, மணல்­கு­டி­யி­ருப்­பில் உள்ள சிறு­வர் பூங்­கா­வுக்கு அரு­கில் இயங்­கிய மது­பா­ன­சா­லை­யு­டன் கூடிய விடுதி மக்­க­ளின் எதிர்ப்­பால் மூடப்­பட்­டி­ருந்த நிலை­யில், தற்­போது மீண்­டும் இர­க­சிய அனு­ம­தி­யின் பெய­ரில் திறக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.


இரு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் இந்த விடுதி அமைக்­கப்­பட்­டது. அதற்கு பிர­தேச மக்­கள் எதிர்ப்­புத் தெரி­வித்து வந்­த­னர். அதை­ய­டுத்து இந்த விட­யம் மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தி­லும் ஆரா­யப்­பட்­டது.

2018ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் நடை­பெற்ற ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் இந்த விடு­தியை உட­ன­டி­யாக மூடு­வது என்று தீர்­மா­னிக்­கப் பட்­டது. எனி­னும் கடந்த ஆண்டு இறு­தி­வரை இயங்­கி­யது.

அது தொடர்­பில் மாவட்­டச் செய­ல­ரி­டம் கேட்­ட­போது, ஆண்டு முழு­மைக்­கான அனு­ம­தி­யைப் பெற்று விடுதி இயங்­கு­கின்­றது. அத­னால் இடையே அதை முடி­யா­துள்­ளது. ஆனால் புதிய ஆண்­டுக்­கான அனு­மதி வழங்­கப்­ப­டாது என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்த ஆண்டு ஆரம்­பத்­தில் அந்த விடுதி மூடப்­பட்­டி­ருந் தது. கடந்த 3 நாள்­க­ளாக அந்த விடுதி இயங்­கு­கின்­றது என்று பிர­தேச மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர். மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் விடு­தியை மூடு­வது என்று தீர்­மா­னிக்­கப் பட்­டுள்ள நிலை­யில் அது இயங்­கு­வது எவ்­வாறு என்று முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­லா­ளர் திரு­மதி ரூப­வதி கேதீஸ்­வ­ர­னி­டம் கேட்­ட­போது-.

அந்த விடுதி திறக்­கப்­பட்­ட­மைக்­கும் எமக்­கும் எந்­தத் தொடர்­பும் கிடை­யாது. அந்த விடு­திக்­கான அனு­மதி சுற்­றுலா அதி­கார சபை­யின் நடை­மு­றைக்­க­மைய வழங்­கப்­பட்­டுள்­ள­தால், அவர்­க­ளின் ஒத்­து­ழைப்­பு­டன் விடுதி மீண்­டும் இயங்­குி­கின்­றது. அதற்கு பிர­தேச செய­ல­கமோ, மாவட்­டச் செய­ல­கமோ எந்த ஒப்­பு­த­லும் வழங்­க­வில்லை.- என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.