தமிழ் அரசுக் கட்சி மாநாடு – மார்ச்சில் யாழ்ப்பாணத்தில் நடக்கும்!!

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மாநாடு எதிர்­வ­ரும் மார்ச் மாதம் 22, 23, 24 ஆம் திக­தி­க­ளில் யாழ்ப்­பா­ணத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. கட்­சி­யின் தலை­வர் மாவை சோ.சேனா­தி­ராசா தலை­மை­யில் கொழும்­பில் நேற்று நடை­பெற்ற மையச் செயற்­கு­ழுக் கூட்­டத்­தி­லேயே தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் திகதி முல்­லைத்­தீ­வில் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டம் நடை­பெற்­றது. இதன்­போது, கட்­சி­யின் மாநாட்டை 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம், செப்­ரெம்­பர் 1ஆம், 2ஆம் திக­தி­க­ளில் நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டது. பின்­னர் மாநாடு நடத்­தப்­ப­ட­வில்லை.
இந்த நிலை­யில் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் கட்சி

மாநாட்டை மார்ச் மாதம் நடத்­தும் தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

தோட்­டத் தொழி­லா­ளர்

மேலும், பெருந்­தோட்­டத் தொழி­லா­ளர்­க­ளின் நாளாந்த அடிப்­ப­டைச் சம்­ப­ளத்தை ஆயி­ரம் ரூபா­வாக அதி­க­ரிக்க வேண்­டும் என்­றும் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

‘பெருந்­தோட்­டத் தொழி­லா­ளர்­க­ளின் நாளாந்த அடிப்­படை சம்­ப­ளத்தை அதி­க­ரிக்க வேண்­டும் எனக் கோரி நாட­ளா­விய ரீதி­யில் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரும் போராட்­டங்­க­ளுக்கு எமது ஆத­ர­வைத் தெரி­விக்­கின்­றோம். நாளாந்த அடிப்­படை சம்­ப­ளத்தை ஆயி­ரம் ரூபா­வாக அதி­க­ரிக்க வேண்­டும். சம்­பள அதி­க­ரிப்பு தொடர்­பாக தொழிற்­சங்­கங்­க­ளும் தோட்ட முத­லா­ளி­மார் சம்­மே­ள­ன­மும் ஓர் இணக்­கத்­துக்கு வர­வேண்­டும்’ என்று தமிழ் அர­சுக் கட்­சி­யி­னர் தமது தீர்­மா­னத்­தில் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

சிவ­மோ­கன், குக­தாஸ்

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டத்­திற்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­மோ­க­னும், குக­தா­ஸும், சிறப்பு விருந்­தி­னர்­கள் என்ற அடிப்­ப­டை­யில் தொடர்ச்­சி­யா­கக் கலந்து கொள்­வது தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறீ­த­ரன் கேள்வி எழுப்­பி­யுள்­ளார். இத­னை­ய­டுத்து இரு­வ­ரை­யும் மையச் செயற்­கு­ழு­வில் இணைக்­கும் முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

கட்சி தாவி­யோர்

தமிழ் அர­சுக் கட்­சி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த மன்­னா­ரைச் சேர்ந்த சிவ­க­ரன், மாகா­ண­சபை முன்­னாள் அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் ஆகி­யோரை கட்­சி­யி­லி­ருந்து முழு­மை­யாக நீக்­கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் பின்­னர் கட்­சிக் கட்­டுப்­பா­டு­களை மீறிச் செயற்­பட்ட உறுப்­பி­னர்­களை இடை­நி­றுத்­த­வும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

வலி.தெற்கு பிர­தேச சபை­யின் முன்­னாள் உறுப்­பி­னர் தி.பிர­காஸை கட்­சிக் கட்­டுப்­பாட்டை மீறி­ய­தற்­காக இடை­நி­றுத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. அவர் தன் மீதான தவறை ஏற்­றுக் கொண்­ட­மை­யால் கட்சி உறுப்­பி­ன­ரா­கத் தொடர அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய கட்சி ஆரம்­பித்த முன்­னாள் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மற்­றும் க.அருந்­த­வ­பா­லன் தொடர்­பி­லும் ஆரா­யப்­பட்­டுள்­ளது. அவர்­கள் புதிய கட்சி ஆரம்­பித்­துள்­ள­மை­யால் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்­குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

புளொட் அமைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வியா­ழேந்­தி­ரனை கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தாக அறி­வித்­த­மை­யால், தமிழ் அர­சுக் கட்­சி­யும், புளொட் அமைப்­பும் இணைந்து அவர் தொடர்­பில் ஆரம்ப விசா­ரணை நடத்­த­வும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, திரு­கோ­ண­மலை மாவட்­டம் தொடர்­பில் நேற்­றைய கூட்­டத்­தில் பெரும் சர்ச்சை ஏற்­பட்­டுள்­ளது. வடக்கு மற்­றும் கிழக்­குக்­கான அபி­வி­ருத்­திச் செய­ல­ணி­யில் கிழக்கு இணைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்ட குக­தா­சன், தன்­னிச்­சை­யா­க­வும், சிலரை மாத்­தி­ரம் இணைத்து முடி­வு­கள் எடுக்­கின்­றார் என்று குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது. இது தொடர்­பில் நீண்ட வாதப் பிர­தி­வா­தங்­கள் இடம்­பெற்­றன. நிர்­வா­கச் செய­ல­ரின் தலை­யீட்டை அடுத்து இந்த விட­யம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.