பிறமொழி கற்றாலே தமிழ் மொழியின் ஆழம் புரியும்!! வடக்கு ஆளுநர்!!

ஒரு மொழி­யின் ஆழத்தை நாம் அறிய வேண்­டு­மா­னால் வேறு ஒரு மொழி­யைக் கற்­க­வேண்­டும். அப்­போ­து­தான் எமது தாய்­மொ­ழி­யான தமி­ழின் ஆழத்தை – சிறப்­புக்­களை – பெரு­மை­களை அறிந்து கொள்­ள­மு­டி­யும். யாழ்ப்­பா­ணத்­தில் பேசப்­ப­டு­கின்ற தமிழே தூய தமிழ். இவ்­வாறு வடக்கு மாகாண ஆளு­நர் கலா­நிதி சுரேன் ராக­வன் தெரி­வித்­தார்.

வடக்கு மாகா­ணத்­தில்  நிய­ம­னங்­கள் நேற்று வழங்கி வைக்­கப்­பட்­டன.  இந்நிகழ்வில் முதன்மை விருந்­தி­ன­ராக கலந்து கொண்­ட வடக்கு மாகாண ஆளு­நர் கலா­நிதி சுரேன் ராக­வன் அவா்களே மேற்படி கருத்தினைக்கூறியிருந்தாா். அவா் மேலும் கூறியதாவது....


தமிழ்த் தேசத்தை அழிக்க நினைத்த எதி­ரி­கள், எமது மண்ணை அழிப்­ப­தற்கு முன்­னர் எம்­மி­ட­மி­ருந்த அரிய புத்­த­கங்­களை எரித்­தார்­கள். தமிழ் மொழி­யை­யும் எமது கலா­சா­ரத்­தை­யும் பாது­காக்­கும் பொறுப்பு அனைத்­துத் தமிழ் மக்­க­ளுக்­கும் உள்­ளது.

அலு­வ­ல­கங்­க­ளில் பணி­யாற்­றும் பெண் பணி­யா­ளர்­க­ளுக்கு மதிப்­புக் கொடுங்­கள். அவர்­க­ளுக்கு வாய்ப்­புக்­களை வழங்கி சம உரிமை கொடுங்­கள். பெண்­கள் பலர் வடக்­கில் உயர் அதி­கா­ரி­க­ளாக உள்­ளார்­கள். பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு ஆண்­களை விட பெண்­களே அதி­க­மா­கத் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றார்­கள். அரச உத்­தி­யோ­கங்­க­ளில் கூட பெண்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துக் கொண்டு செல்­கின்­றது. இதே நிலமை தொடர்ந்­தால் ஆண்­கள், பெண்­க­ளின் கால­டி­யில் இருக்­கும் நிலமை கூட வர­லாம் -– என்­றார்.


இந்த நிகழ்­வில் வடக்கு மாகாண தலை­மைச் செய­லர் அ.பத்­தி­நா­தன் தெரி­வித்­த­தா­வது: வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்கு வேலை வாய்ப்­புக் கொடுக்­கின்ற நிய­ம­ன­மாக ஆசி­ரி­யர் நிய­ம­னத்தை நோக்­கக் கூடாது. ஏனைய அரச பணி­க­ளை­விட ஆசி­ரியப் பணி வித்­தி­யா­ச­மா­னது. எதிர்­கா­லச் சந்­த­தியை உரு­வாக்­கும் பணி. ஆசி­ரி­யர் துறை­யில் நிய­ம­னம் பெற்­றுள்ள நீங்­கள் அக்­க­றை­யு­டன் செயற்­ப­டுங்­கள். பொறு­மை­யு­ட­னும், கட­மை­யு­ணர்­வு­ட­னும் பணி­யாற்­றுங்­கள்.

வடக்கு மாகா­ணத்­தின் கல்வி வளர்ச்சி வீதம் குறைந்து செல்­கின்­றது என்று பல­ரும் குற்­றம் சுமத்­து­கின்­ற­னர். இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே வடக்கு மாகாண கல்­வித் துறைக்­குள் நீங்­கள் நுழைந்­துள்­ளீர்­கள். கல்­வித்­து­றைக்கு ஏற்­பட்­டுள்ள களங்­கத்தைத் தகர்த்து எறி­யும் வகை­யில் அர்ப்­ப­ணிப்­பு­டன் கட­மை­க­ளைச் செய்­யுங்­கள் -– என்­றார்.

கணித, விஞ்­ஞான, ஆங்­கில பட்­ட­தா­ரி­கள் 160 பேருக்­கும், கலைப் பட்­ட­தா­ரி­கள் 89 பேருக்­கும் நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.