சிறிசேனவின் அனுமதியின்றி, இலங்கைக்குள் அமெரிக்க முகாம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி, இலங்கைக்குள் அமெரிக்க முகாமொன்றை ஸ்தாபிக்க அமெரிக்கத் தூதரகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதியின் அனுமதியின்றி, இலங்கையில் அமெரிக்காவில் முகாமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அலுவலகத்தின் ஊடாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமது சொந்த நாட்டில் அமெரிக்காவின் முகாமை அமைக்க அனுமதியளித்து, அதனால் ஏற்பட்ட விளைவை நாம் பனாமா சம்பவத்தின் ஊடாகவே நன்றாக உணர்ந்திருப்போம்.
அமெரிக்காவின் இராணுவம், இலங்கையில் முகாமிட்டால் பனாமாவில் ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும். எமது வீட்டுக்குள் நாயொன்று நுழைந்தால் இலகுவில் விரட்டிவிடலாம். ஆனால், புலியொன்று உட்புகுந்தால் நாம் தான் வீட்டை விட்டு ஓடவேண்டும்.
இந்த விடயத்தில் அமெரிக்கா என்பது புலியைப் போன்றது என்பதை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும். இதனை அரசாங்கம் ஒரு எச்சரிக்கையாகக் கருதவேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை