நிலத்தடி நீரிலும் பிளாஸ்டிக்! - அச்சுறுத்தும் ஆய்வறிக்கை
மைக்ரோ பிளாஸ்டிக். இதனால் மேற்பரப்பில் இருக்கும் நீராதாரங்கள் மாசடைந்து கொண்டிருப்பது ஏற்கெனவே தீவிரப் பிரச்னையாக உள்ளது.
இதைத் தாண்டி நிலத்தடி நீரில் அதன் பாதிப்புகள் எந்தளவுக்கு இருக்கிறது?
இதுகுறித்த ஆய்வுகளைச் சமீபமாகத்தான் ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சுண்ணாம்புப் பாறைகளால் ஆன நிலத்தடி நீர்த்தேக்கங்களே உலகின் நிலத்தடி நீர்ப் பயன்பாட்டில் 25 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. கிரவுண்டு வாட்டர் என்ற ஆங்கில ஆய்வுப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கை அத்தகைய நீர்த்தேக்கங்களில் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி மருத்துவம், வீட்டுப் பொருள்கள் போன்றவற்றில் பயன்படும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் அவற்றில் கலந்திருப்பது தெரியவந்தது.
சுற்றுச்சூழலில் கொட்டப்படும் பிளாஸ்டிக்குகள் மக்குவதில்லை. அவை துகள்களாக உடைகின்றன. அப்படி உடையும் பிளாஸ்டிக் கடல்வாழ் உயிரினங்களின் குடல்களிலும், செவுள்களிலும் சென்று சேர்ந்துகொண்டிருக்கின்றன. அதனால் பல வேதிமப் பிரச்னைகள் அவற்றின் உடலில் ஏற்படுகின்றன" என்கிறார் இல்லினாய்ஸ் நீண்டகாலத் தொழில்நுட்ப ஆய்வகத்தின் ஆய்வாளரான ஜான் ஸ்காட்.
துகள்களாக உடையும் பிளாஸ்டிக்குகள் பஞ்சுபோல் செயல்பட்டு நச்சுகளையும், நுண்கிருமிகளையும் தன்னுள் ஈர்த்துக்கொள்கின்றன. அதனால், அவை உணவு மற்றும் நீரில் மிக எளிமையாகப் பாதிப்பை ஏற்படுத்த முடிகின்றது. சுண்ணாம்புப் பாறைகளில் ஏற்படும் விரிசல்கள் மற்றும் இடுக்குகள் வழியாகவும் நிலத்தடி நீர் பாய்கின்றது. அப்படிக் கசிந்து வெளியாகும் நீரே ஆங்காங்கே நிலங்களில் சிற்றோடைகளாகவும், விவசாயப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தும் வகையில் நிலத்தடியில் குறுகிய ஆழத்திலேயும் கிடைக்கின்றது. ஆய்வாளர்கள் நிலத்தடி நீர் மூலம் உருவாகும் நீர்நிலைகளான கிணறுகள், ஓடைகள் போன்றவற்றிலும் நேரடியாகவே நிலத்தடி நீரையுமாக மொத்தம் 17 மாதிரிகளை எடுத்துள்ளார்கள். அதில் 11 மாதிரிகள் உடைந்த சுண்ணாம்புப் பாறைகளில் உள்ள நிலத்தடி நீரில் எடுத்தவை. அவற்றை ஆய்வு செய்ததில் ஒன்றைத்தவிர மற்ற அனைத்து மாதிரிகளிலுமே மைக்ரோ பிளாஸ்டிக்குகள் கலந்திருந்தது தெரியவந்தது(1 லிட்டருக்கு 15.2 துகள்கள் என்ற விகிதத்தில்).
இதுவரை நாம் உற்பத்தி செய்துள்ள பிளாஸ்டிக்கின் அளவு 6.3 பில்லியன் டன்கள். அதில் 79 சதவிகிதம் பயன்பாடற்ற நிலங்களிலும் இயற்கையான சூழலிலுமே கொட்டப்பட்டுத் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இவை இன்னும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் ஆய்வாளர்கள் உள்ளனர்.
``இந்த ஆய்வு அதன் ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது. இந்தப் பிரச்னையை இன்னும் ஆழமாகத் தெரிந்துகொள்ள நாங்கள் மேற்கொண்டு ஆய்வுசெய்து பார்க்கிறோம்" என்கிறார் சிகாகோவில் அமைந்துள்ள லயோலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டிம் ஹோல்லெயின் (Tim Hoellein)
க. சுபகுணம்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை