கஷ்டம் வரும்போது அதிலிருந்து வெளியில வரப் பழகிக்கணும்'- `விஜய் டி.வி' மைனா!!
விஜய் டி.வி `சரவணன் மீனாட்சி' மைனா என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு நந்தினியின் கேரக்டர் பிரபலமானது.
அதன் பின் காதல், திருமணம், இழப்பு எனப் பலகட்டத்தைத் தாண்டி வந்திருக்கிறார் நந்தினி
தற்போது விஜய் டி.வியில் `அரண்மனை கிளி' சீரியலில் நடித்து வருகிறார் மைனா நந்தினி. மேலும் தர்மப் பிரபு படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.
`அரண்மனை கிளி' சீரியலில் விஜயா என்கிற கேரக்டரில் நடிக்கிறேன். `சின்னத்தம்பி’ சீரியலில் மைனா என்கிற பெயரில் `சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்திருந்த மைனா கதாபாத்திரமாகவே நடிச்சிருக்கேன். படங்களைப் பொறுத்தவரைக்கும் `காஞ்சனா' படத்தில் நடித்திருந்தேன். அதை அடுத்து இரண்டாவதாக நடித்திருக்கும் படம் `தர்மப் பிரபு’. இதில் யோகிபாபுதான் ஹீரோ. இரண்டு சீன்தான் பண்ணியிருக்கேன். இரண்டுமே ரீச் ஆகக்கூடிய சீன்கள். எமதர்ம உலகம், பூலோகம் என இரண்டு உலகத்தையும் காண்பித்திருப்பார்கள். நம்ம நாட்டில் உள்ள பிரச்னைகளுக்குக் காரணமாக இருப்பவர்களுக்கு எமதர்ம உலகத்தில் என்ன தண்டனை என்கிற கான்சப்ட் உள்ள படம்.'' என்றவரிடம் கணவர் கார்த்திகேயனின் இழப்பிலிருந்து மீண்டு வந்துவிட்டீர்களா எனக் கேட்டதற்கு,
`நடிகர் என மாறிட்டாலே அதற்கு தகுந்தாற் போல மாற வேண்டியது அவசியம் இல்லையா?. அதனால்தான் நான் இடத்திற்குத் தகுந்தாற்போல், மக்களுக்குப் பிடித்தமாதிரியான கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து நடிச்சிட்டு இருக்கேன். பர்சனலாப் பார்க்கும்போது நான் செம்ம போரிங்கான கேரக்டர்தான். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் செம்ம ஜாலியாகத்தான் காண்பிச்சுக்குவேன். என்னைப் பார்த்து சந்தோசப்பட என்னத் தேவையோ அந்த முயற்சியைத்தான் எடுப்பேன். என்னைச் சுற்றி இருப்பவர்கள் வெறும் 10 பேர்தான். ஆனால், வெளியில் லட்சக்கணக்கானோர் என் நடிப்பைப் பார்க்கிறார்கள். அவர்களுக்காக நான் இப்படி மாறித்தானே ஆகணும்''.
`என்னுடைய கடந்த காலத்தைப் பற்றிப் பேச விரும்பல. நாம என்ன பண்ணாலும் பேசுறவங்க பேசிட்டுத்தான் இருப்பாங்க. பிடிச்சா நல்லாப் பேசுவாங்க. பிடிக்கலனா தப்பாப் பேசுவாங்க. இந்த இரண்டு கேட்டகரிதான். இது ஆண்களுக்கும் பொருந்தும். பெண்ணான எனக்கு மட்டுமல்ல ஆணுக்கும் இழப்பின் வலி சரிசமம்தான் அதனால், பிராக்டிகலா இருந்தா மட்டும்தான் லைஃபை ஃபேஸ் பண்ண முடியும். நான் ஃபேஸ் பண்ணி வாழ்றேன். மத்தவங்களால இதை ஃபேஸ் பண்ண முடியுமானு தெரியல. என்னால தாங்கிக்க முடியுறதாலதான் கடவுள் நமக்குக் கொடுக்கிறாரோனு சில சமயம் நினைக்கிறதுண்டு. சின்ன வயசுல இருந்தே அப்பா, அம்மா `இது சரியாயிடும் பாப்பா'னு தான் சொல்லி வளர்த்தாங்க. ரொம்ப சிரிச்சா எதோ கஷ்டம் வரப்போகுதுனு நம்மள நாமே கன்ட்ரோல் பண்ணிக்கிறோம் இல்லையா. அந்தமாதிரி கஷ்டம் வரும்போதும் அதிலிருந்து வெளியில வரப் பழகிக்கணும்.’’ என்கிறார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை