சட்டத்தரணிகள் சங்கத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு!!

வவுனியா சட்டத்தரணிகள் சங்கமும், கல்விசார் ஆர்வலர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மு. சிற்றம்பலம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
2018 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்வையில் ஆறு பாடப்பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி வவுனியா நகர மண்டபத்தில் மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
உயர்தரப்பரீட்சையில் 6 பாடப்பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களை வவுனியா சட்டத்தரணிகள் சங்கமும், கல்விசார் ஆர்வலர்களும் இணைந்து வருடாந்தம் புலமைப்பரிசில் மற்றும் கௌரவிப்பு நிகழ்வை நடத்தி வருகின்றோம்.
இதன் பிரகாரம் கடந்த வருடமும் சித்திபெற்ற முதல் மூன்று மாணவர்கள் வீதம் 6 பாடப்பிரிவுகளில் தெரிவு செய்து புலமைப்பரிசில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.