அதிபருக்காய் ஆர்ப்பாட்டம்!

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட சின்னஅடம்பன் பாரதி வித்தியாலயத்திற்கு  அதிபர் இன்மையால்  கல்விசார் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்து பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றை இன்றையதினம் (28.01) முன்னெடுத்திருந்தனர்.

காலை 7 மணிக்கு பாடசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலைக்குள் அதிபர் ஆசிரியர் மாணவர்களை அனுமதிக்காது வாயிலை மறைத்தபடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டம் சுமார் இரண்டு மணித்தியாலங்களாக இடம்பெற்றது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வடக்கு கல்வி வலயத்தில் இருந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்தையை மேற்கொண்டிருந்தனர். இதன்போது எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் புதிய அதிபர் ஒருவரை நியமித்து தருவதாக உறுதிமொழிவழங்கபட்ட பின்னர் ஆர்பாட்டம் கைவிடபட்டது.
ஆர்பாட்டதில் ஈடுபட்டவர்கள் பாடசாலையில் கட்சிகள் வேண்டாம், கட்டடங்கள் கட்டபட்டது அழகிற்காக இல்லை, இது  பாராளுமன்றம் இல்லை ,கற்களாக உள்ள பிள்ளைகளை செதுக்குவதற்கு சிற்பிகளை தாருங்கள்  போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன்  பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.