மரணதண்டனையிலிருந்து கணவரை மீட்ட கேரள மக்களுக்கு மனைவி கண்ணீர் மல்க நன்றி!!
குவைத்தில் பணி புரிந்து வந்தவர் அர்ஜுன் ஆத்திமுத்து. இவர் தஞ்சையைச் சேர்ந்தவர். அர்ஜுன் ஆத்திமுத்துவின் மனைவி மாலதி தஞ்சையில் வசித்தார்.
மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் வாஜித் என்ற சக ஊழியரைக் கடந்த 2013- ம் ஆண்டு அர்ஜுன் கொலை செய்து விட்டார். குவைத் நீதிமன்றம் அர்ஜுன் ஆத்திமுத்துவுக்கு மரண தண்டனை விதித்தது. கணவர் சிறையில் கிடக்க, மாலதியின் குடும்பம் வறுமையில் வாடத் தொடங்கியது. அதோடு, கணவரை மீட்க வேண்டிய சூழலுக்கும் மாலதி தள்ளப்பட்டார். மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் வாஜித்தின் குடும்பத்தினரைச் சந்தித்து தன் கணவரை உயிரை மீட்க உதவும்படி கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் யூத் லீக் அமைப்பின் தலைவர் பானக்காடு சையத் முன்வார் அலி ஷாகீப் தாங்கல் என்பவர் உதவினார்.
அப்துல் வாஜிப்பின் குடும்பத்தினரும் வறுமையின் பிடியில்தான் இருந்தனர். ஷாகீப் தங்கல் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். , தங்கள் குடும்பத்துக்குத் தேவையான நிதி அளித்தால் மாலதியின் கணவரை மன்னிக்கும்படி குவைத் அரசுக்குக் கடிதம் அளிப்பதாகக் கூறினார். வறுமையின் பிடியில் இருந்த மாலதியால் ரூ.5 லட்சத்துக்கு மேல் திரட்ட முடியவில்லை.. தொடர்ந்து ஷாகீப் தங்கல் மாலதியின் கணவரை காப்பாற்ற நிதி அளிக்குமாறு மலப்புரம் பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து ரூ. 30 லட்ச நன்கொடையாகக் கிடைத்தது. கடந்த 2017-ம் ஆண்டு அப்துல்வாஜிக்கின் குடும்பத்தினரிடம் ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை