கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

போலீஸார் பொய் வழக்கு பதிவுசெய்ததாகக் கூறி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர், ராணி. இவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். திடீரென  மண்ணெண்ணெய்யைத் தலையில் ஊற்றி, நெருப்புப்பெட்டியால் தீப்பற்றவைக்க முயற்சி செய்தார். அங்கிருந்தவர்கள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே நெருப்புப் பெட்டியையும், மண்ணெண்ணெய் கேனையும் தட்டிவிட்டனர். உடனடியாக அங்கிருந்த காவலர்கள் ராணியை மீட்டனர். இதுகுறித்து ராணி கூறுகையில், "கடந்த 18 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்துவந்தேன்.
நான் குடியிருந்த வீட்டின் உரிமையாளர், வீட்டை எழுதிக் கொடுப்பதாகக் கூறி, 90 ஆயிரம் ரூபாய் வாங்கினார். பின்னர், அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடிசெய்துவிட்டார். நேற்று வீட்டுக்கு வந்து எங்களிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த நிலையில், கோட்டார் போலீஸார் என் மீதும் எனது கணவர் கென்னடி மீதும் பொய் வழக்கு பதிவுசெய்துள்ளனர்" என்றார். ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில், பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.