மைத்திரிக்கு-மகிந்த உபதேசம்!

பயங்­க­ர­வா­தி­க­ளு­டன் குருதி சிந்­திப் போரிட்டு நாட்­டை­யும் மக்­க­ளை­யும் பாது­காத்த எமது படை­யி­னரை புலம்­பெ­யர் புலி­க­ளின் நிகழ்ச்சி நிர­லுக்­கேற்ப பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­டம் காட்­டிக் கொடுக்­கும் நட­வ­டிக்­கை­யில் அரச மட்­டத்­தில் முக்­கிய பத­வி­க­ளில் இருப்­ப­வர்­க­ளும் இறங்­கி­யுள்­ள­னர். அவர்­கள் அந்­தந்­தப் பத­வி­க­ளி­லி­ருந்து உட­ன­டி­யாக நீக்­கப்­பட வேண்­டும். இந்­தக் கரு­மத்தை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கால­தா­ம­த­மின்­றிச் செயய வேண்­டும்.


இவ்­வாறு வலி­யு­றுத்­தி­னார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் முன்­னாள் அரச தலை­வ­ரு­மான மகிந்த ராஜ­பக்ச.

‘இரா­ணு­வத்­தில் உள்ள அனை­வ­ரும் போர் வீரர்­கள் அல்ல. இரா­ணு­வத்­தில் உள்ள ஒரு­வர் குற்­றம் செய்­தால் அவர் குற்­ற­வா­ளி­தான். விரு­து­க­ளைப் பெற்­ற­வர்­கள்­தான் போர் வீரர்­கள். இரண்டு வாரங்­க­ளில் 11 படை­யி­ன­ருக்கு எதி­ராக குற்­றச்­சாட்டு நீதி­மன்­றத்­தில் சுமத்­தப்­ப­டும். அதற்­குப் பின்­னர் புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளால் வாய் திறக்க முடி­யாது’ என்று கொழும்பு நாலந்தா கல்­லு­ரி­யில் நடந்த நிகழ்வு ஒன்­றில் பாது­காப்­புச் செய­லர் ஹேம­சிறி பெர்­னான்டோ தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­தக் கருத்­துத் தொடர்­பில் மகிந்த ராஜ­பக்­ச­வி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது.
அதற்கு அவர் தெரி­வித்­த­தா­வது:

பயங்­க­ர­வா­தி­க­ளைத் தோற்­க­டித்த எமது படை­யி­னர் அனை­வ­ரும் போர் வீரர்­கள். அவர்­க­ளைத் தரம் குறைத்து அழைக்க முடி­யாது. இப்­ப­டித் திறமை வாய்ந்த எமது வீரர்­கள் மீது போர்க்­குற்­றச்­சாட்­டுக்­களை பன்­னாட்­டுச் சமூ­க­மும் புலம்­பெ­யர் புலி அமைப்­பி­ன­ரும் சுமத்­தி­யுள்­ள­னர். இது எந்­த­வ­கை­யில் நியா­யம்?

எமது படை­வீ­ரர்­களை உள்­நாட்டு நீதி­மன்­றிலோ அல்­லது பன்­னாட்டு நீதி­மன்­றிலோ தண்­டிக்க நாம் ஒரு­போ­தும் இட­ம­ளி­யோம். படை வீரர்­களை நாம் மதிப்­ப­ளிக்க வேண்­டும். நாட்­டுக்­காக உயிர்­நீத்த படை­வீ­ரர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு நாம் உத­வி­க­ளைச் செய்ய வேண்­டும் – என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.