யாழில் 74 கிலோ கஞ்சா மீட்ப்பு!

யாழ்ப்­பா­ணத்­தில் வாழைத் தோட்­டம் ஒன்­றில் 74 கிலோ கஞ்சா நேற்று மீட்­கப்­பட்­டுள் ­ளது. அந்­தத் தோட்­டத்­தின் உரி­மை­யா­ளர் சந்­தே­கத்­தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.


யாழ்ப்­பா­ணம் குடா­நாட்­டில் அண்­மைய நாள்­க­ளில் பெரு­ம­ளவு போதைப்பொருள்­கள் கைப்­பற்­றப்­ப­டு­கின்­றன. போதை ஒழிப்பு வாரம் முன்­னெ­டுக்­கப்­ப­டும் நிலை­யில் போதைப் பொருள்­கள் தின­மும் கண்­டெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

பருத்­தித்­து­றைக் கடற்­ப­டை­யி­ன­ருக்கு இர­க­சி­யத் தக­வல் ஒன்று கிடைத்­துள்­ளது. அதை­ய­டுத்து கடற்­ப­டை­யி­ன­ரும், பருத்­தித்­து­றைப் பொலி­ஸா­ரும் இணைந்து இர­க­சிய நட­வ­டிக்­கையை மேற்­கொண்­ட­னர்.

காங்­கே­சன்­து­றைப் பிராந்­திய பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் உடு­கம சூரி­ய­வின் வழி­காட்­ட­லில் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. நேற்று 11 மணி­ய­ள­வில் பருத்­தித்­துறை, இன்­ப­சிட்­டி­யில் வாழைத் தோட்­டம் ஒன்று சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டது. அந்­தத் தோட்­டத்­தில் உள்ள கட்­ட­டம் ஒன்­றின் கூரை­யின் மேல் பரப்­பப்­பட்­டுக் காய வைக்­கப்­பட்ட நிலை­யில் 74 கிலோ கஞ்சா கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அந்­தத் தோட்­டத்­தின் உரி­மை­யா­ளர் சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பல கோணங்­க­ளில் விசா­ர­ணை­கள் முடுக்கி விடப்­பட்­டுள்­ளன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
விசா­ர­ணை­க­ளின் பின்­னர் சந்­தே­க­ந­பர் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

அதே­வேளை, பருத்­தித்­துறை, வல்­வெட்­டித்­து­றை­யில் நேற்­று­முன்­தி­னம் 110 கிலோ கஞ்சா மீட்­கப்­பட்­டது. வீடு ஒன்­றில் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் கஞ்சா மீட்­கப்­பட்­டது.

இந்த வாரம் ஏழா­லைப் பகு­தி­யில் 7 ஆயி­ரத்து 500 லீற்­றர் தூய மது­சா­ரம் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் மீட்­கப்­பட்­டி­ருந்­தமை தெரிந்­ததே.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.