திருகோணமலைச் சம்பவம்!! பெரும் பரபரப்பு!!

திருகோணமலை – கிண்ணியா, கங்கைப் பால கீரைத் தீவு பகுதியில் இன்று இலங்கை கடற்படை அதிகாரிகள் மீதான கல்வீச்சு தாக்குதலில் 12 கடற்படை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 12 கடற்படை அதிகாரிகளில் நால்வர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முற்பட்ட சம்பவத்தை அடுத்து இருவர் கடலில் பாய்ந்து காணாமற்போயிருந்தனர்.

இதனை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட பொதுமக்களால் இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போதே குறித்த கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் காணாமற்போன கிண்னியா, இடிமன் பகுதியைச் சேர்ந்த இருவரில் ஒருவரின் சடலம்  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டவர் அப்துல் ரவூப் மொஹமட் பரிக் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அதேசமயம் காணாமற்போயுள்ள பசீர் மொஹமட் ரமீஸை தேடும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

எனினும், கடற்படடையினருடன் பொது மக்கள் மோதலில் ஈடுபட்ட நிலையில், தேடுதல் நடவடிக்கையில் இருந்து கடற்படை விலகிக் கொண்டுள்ளதாகவும், பொது மக்கள் மட்டும் குறித்த இளைஞனை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.