குப்பைமேட்டால் பாதிப்பு -பம்பைமடு கிராம மக்கள் தொடர் போராட்டம்!

வவுனியா பிரதேசத்தின் கழிவுகள் பம்பைமடுவில் கொட்டப்படுகின்றமையால், தமது கிராமம் பல்வேறு பாதிப்புகளைச் சந்திப்பதாக தெரிவித்து சாளம்பைகுளத்தில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் ஆர்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.



காலை 7 மணியளவில் குப்பைமேட்டுக்குச் செல்லும் பிரதான வாயிலை மறித்த பொதுமக்கள் அவ்விடத்தில் பந்தல் அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“நீண்ட காலமாக இப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் எமது கிராமத்தில் வசிக்கமுடியாத நிலை காணப்படுகின்றது. துர்நாற்றம் வீசிவருவதுடன், இலையான்கள், கொசுக்களின் தொல்லைகள் அதிகமாகக் காணப்படுகின்றது.

இதனால் புதுவிதமான தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன. குப்பை மேட்டை எரித்து விடுவதால் அதிலிருந்து வெளிவரும் புகைமண்டலம் சுவாசபாதிப்புகளை உருவாக்குகிறது. கர்ப்பிணிகள் முதல் சிறு குழந்தைகள் வரை அனைத்து பொதுமக்களும் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பலவருடங்களாக உரிய அதிகாரிகளிற்கு தெரியபடுத்தியும் எவரும் கரிசனை கொள்ளவில்லை. எனவே நாம் பொறுமையிழந்துள்ளோம். குறித்த குப்பைமேடு அகற்றபடாவிடில் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்” என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.

குப்பைகளை ஏற்றி வந்த உழவியந்திரங்களையும் உள்ளே செல்லஅ னுமதிக்காது பாதைகளை வழிமறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு மாவட்ட மேலதிக செயலர் தி.திரேஸ்குமார் வருகை தந்தார். . குறித்த குப்பைமேட்டை அகற்றுவது தொடர்பாக இன்று மாலை அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய வகையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

அதில் சரியான தீர்வு ஒன்று வழங்கப்படும் எனவே போராட்டத்தை கைவிடுமாறு கேரினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள், நீங்கள் கலந்துரையாடலை முடித்து விட்டு நாம் ஆர்பாட்டத்தில் ஈடுபடும் பகுதிக்கு வருகை தந்து முடிவைக் கூறுங்கள். நாம் எதிர்பார்த்த தீர்வு கிடைத்தால் போராட்டத்தை கைவிடுவோம் எனத் தெரிவித்தனர்.

போராட்டம் காரணமாக மாவட்டத்தின் கழிவகற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதேசத்தின் குப்பைகளை அகற்றிய வாகனங்கள் குப்பைகளை கொட்டமுடியாமல் திரும்பிச் சென்றன. வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.