நிறவெறி பேச்சுக்காக மன்னிப்பு கேட்ட பாலிவுட் நடிகை!

நைஜீரியாவை சேர்ந்த கால்பந்து வீரரை 'கொரில்லா' என விமர்சித்ததாக எழுந்த சர்ச்சையில், மாடல் மற்றும் பாலிவுட் நடிகை ஈஷா குப்தா, சமூகவலைதளத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.


பாலிவுட் நடிகை ஈஷா குப்தா, இங்கிலாந்து கால்பந்து பிரீமியர் லீக்கில் விளையாடும் ஆர்சனல் அணியின் இந்திய தூதராக செயல்பட்டு வருகிறார். இவர் தனது நண்பருடன் ஆர்சனல் அணியின் சமீபத்திய போட்டியை பற்றி மொபைலில் சேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, அந்த அணியில் விளையாடும் நைஜீரிய வீரர் இவோபியின் மோசமான பெர்பார்மன்ஸ் பற்றி விமர்சனம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர், "அந்த இவோபி 'கொரில்லா' போல இருக்கிறான்" என்றும், அவர் மனிதனாக பரிணாம வளர்ச்சி அடையாமலே இருப்பதாகவும் மிக மோசமாக விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலாக, ஈஷா குப்தா "ஆமாம், அவரை ஏன் இன்னும் போட்டியில் விளையாட வைக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை" என்று பதில் கூறியிருந்தார். நண்பருடன் சேட்டிங் செய்ததை, புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் ஈஷா குப்தா பகிர்ந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள், கருப்பினத்தை சேர்ந்த ஒருவரை 'கொரில்லா' என நிறவெறி பிடித்த வார்த்தைகளால் விமர்சித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஈஷாவையும் அவரது நண்பரை ஆயிரக்கணக்கானோர் கண்டித்தனர். இதை தொடர்ந்து, "அது நிறவெறி பிடித்த பேச்சு என்று எனக்கு தெரியாது" என ஈஷா குப்தா மன்னிப்பு கேட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.