தேர்தலை நடத்தாவிடில்- பதவி துறப்பேன்- மகிந்த!!

மாகாண சபை­கள் தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்தி வரு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அரச தலை­வர் தேர்­த­லுக்கு முன்­னர் மாகா­ண­ச­பைத் தேர்­தல்­கள் நடத்­தப்­ப­ட­வேண்­டும்.
அதா­வது எதிர்­வ­ரும் நவம்­பர் மாதம் 10ஆம் திக­திக்கு முன்­னர் தேர்­தல் நடத்­தப்­ப­ட­வேண்­டும். இல்­லா­வி­டின் தேர்­தல்­கள் ஆணைக்­குழு தவி­சா­ளர் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வேன். இவ்­வாறு எச்­ச­ரித்­துள்­ளார் மகிந்த தேசப்­பி­ரிய.

தேர்­தல்­கள் செய­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அரச தலை­வர் தேர்­தலை முற்­கூட்டி நடத்­த­லாம். அதில் எந்­தப் பிரச்­சி­னை­யும் இல்லை. எவ்­வா­றா­யி­னும் சட்ட ஏற்­பா­டு­க­ளுக்கு அமை­வாக, நவம்­பர் 9ஆம் திக­திக்­கும் டிசெம்­பர் 9ஆம் திக­திக்­கும் இடை­யில் அரச தலை­வர் தேர்­தல் நடத்­தப்­பட்­டா­க­வேண்­டும்.

இந்­தத் தேர்­தலை உரிய காலப் பகு­திக்­குள் நடத்த முடி­யா­விட்­டால் நான் பதவி துறப்­பேன். அதே­போன்று மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்­தலை நவம்­பர் 10ஆம் திக­திக்கு முன்­னர் நடத்த முடி­யாது போகு­மாக இருந்­தால் நான் தவி­சா­ளர் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வேன்.

மாகா­ண­ச­பைத் தேர்­தலை ஒத்­தி­வைப்­பது தொடர்­பில் நாட்­டின் குடி­ம­கன் என்ற அடிப்­ப­டை­யில் வேத­னைப்­ப­டு­கின்­றேன். தேர்­தல் தொடர்­பில் பல பேச்­சுக்­கள் நடந்­துள்­ளன. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­ட­னும் தனித்­துப் பேச்சு நடத்­தி­யுள்­ளேன்.

எல்­லாக் கட்­சி­க­ளி­ன­தும் தலை­வர்­கள் இந்­தத் தேர்­தலை நடத்­த­வேண்­டும் என்று கூறு­கின்­றார்­கள். சில கட்­சி­கள் தங்­க­ளின் நிகழ்சி நிர­லுக்கு அமை­வாக தேர்­தலை நடத்­த­வேண்­டும் என்று கூறு­கின்­றார்­கள்.

கட்­சி­க­ளின் நிகழ்சி நிர­லுக்கு அமை­வாக தேர்­தலை நடத்­து­வ­தற்கு தேர்­தல்­கள் ஆணைக்­குழு தயா­ரில்லை – என்­றார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.