சீன நிறுவனத்திற்கெதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு!!
உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான சீனாவின் ஹூவாவி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க நீதித்துறை குற்றவியல் குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்துள்ளது.
அத்தோடு, ஹூவாவின் நிதியியல் தலைமை அதிகாரி மெங் வான்சூவிற்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
வங்கி மோசடி, நீதித்துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தியமை மற்றும் தொழிநுட்ப திருட்டு உள்ளடங்களாக 23 குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் தடைகள் மற்றும் ஏற்றுமதி தொடர்பான சட்டங்களை சீன நிறுவனங்கள் தொடர்ச்சியாக மீறி வருகின்றன என அமெரிக்க வணிகத்துறை செயலாளர் வில்பர் ரோஸ் தெரிவித்துள்ளார். சீனா தமது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு அமெரிக்காவின் நிதியியல் அமைப்புகளை பயன்படுத்தி வருவதாகவும் இவை யாவும் முடிவுக்கு கொணடுவரப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்த செயற்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் தீவிர நிலையை ஏற்படுத்துமென நிபுணர்கள் கூறுகின்றனர். அத்தோடு, உலகளாவிய விரிவாக்கல் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஈரான் மீது கடுமையான தடைகளை அமெரிக்கா விதித்துள்ள நிலையில், அதனை மீறி தொலைத்தொடர்பு சாதனங்களை விற்பனை செய்ததாக ஹூவாவி நிறுவனத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி ஹூவாவியின் தலைமை நிதியியல் அதிகாரி மெங் வான்சூ கனடாவில் கைதுசெய்யப்பட்டார்.
கனடாவில் அவர் 24 மணிநேர கண்காணிப்பு பிணையில் உள்ளார். அவரை அமெரிக்காவிற்கு நாடுகடத்த வாய்ப்புள்ளதென தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஹூவாவி அதிகாரியை உடன் விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றது.
இவ்வாறான நிலையில், அமெரிக்காவில் தற்போது ஹூவாவி மற்றும் அதன் உயரதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில், மெங் வான்சூ விரைவில் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்காவின் அறிவுறுத்தலின் பிரகாரம் ஹூவாவி அதிகாரி கைதுசெய்யப்பட்டதால் சீனா மற்றும் கனடாவிற்கு இடையிலான உறவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை