தமிழ் என் காதலி..!

உள்ளத்து உணர்வில் எல்லாம்
உரிமையாய் புகுந்த மகள்
கள்ளத்துப் பார்வையினால்
கனிவாக்கிக் கொள்ளை கொண்டாள்


கற்பனையில் அவள் உருவம்
கண்ணெதிரே தீட்டி உள்ளேன்
வெள்ளை உள்ளம் கொண்டதனால்
வெண்மை அவள் தேகம் என்பேன்

கள்ளம் இல்லாச் சிரிப்பழகில்
கொள்ளை கொள்ளும் தமிழணங்கே
உள்ளம் எல்லாம் உருவகத்தில்
அள்ளி வரும்  மொழிமுதலே

கன்னியவள் காதல் என்னில்
கலையாத மோகமவள்
எண்ணியவள் சில நொடியில்
என்னுள்ளே புகுந்திடுவாள்

கனவொன்றும் கண்டதில்லை
நினைவொன்றில் அவள் முகமே
பிரிவொன்று வரும் என்றால்
உயிரன்று அறுந்திருக்கும்

காதலில் உச்சம் தந்தாள்
கண்மடல் சிமிட்டி கொண்டாள்
சாதலில் அச்சம் இல்லை
என் தமிழ் துணையுடையாள்.

என்னவள் தமிழணங்கு
என்னுடன் துணையிருப்பாள்
எழுதிடும் என் கவியில்
எளிமையாய் இருந்திடுவாள் ..

......கவிப்புயல் சரண்......
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.