ஆலயத்தில் வழங்கப்படும் தீர்த்தத்தின் மகிமை.(வேதியன்)

எமதி ஆலயங்களில் பூஜை முடிந்ததன் பின்னர்  தீர்த்தம் வழங்கப்படுகின்றது. அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நாம் பார்ப்போம்


ஆலய வழிபாட்டு முறைகளில் தலை சிறந்ததாகப் புனித தீர்த்தம் அமைந்துள்ளது.
வைணவ திருத்தலங்களில் வழங்கும் துளசி
தீர்த்தம் இரத்தத்தை சுத்தம் செய்வதுடன்
உடலில் பிராணசக்தி மற்றும் நோயெதிர்ப்பு
சக்தியை அதிகரித்து உடலை
வலுப்படுத்துகின்றது. துளசி தீர்த்தம்
தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு புற்று நோய் வராது என்பது மருத்துவ உண்மையாகும்.

சைவத்திருத்தலங்களில் வழங்கும் வில்வ
தீர்த்தம் குன்மம் வயிற்றுக் கடுப்பு
மேகவாயு போன்றவைகளைப்
போக்குகின்றது. அல்சர் எனப்படும் குடல்ப்
புண்ணையும் போக்குகின்றது.
ஆலயங்களில் வழங்கப்படும் மேற்கண்ட
இரண்டு தீர்த்தங்களும் முறைப்படி தயார்
செய்தால் இம்மருத்துவ குணங்கள் நிச்சயம்
உண்டு. இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது.
ஏலம், இலவங்கம், வால்மிளகு, ஜாதிப்பத்திரி பச்சைக் கற்பூரம் இவைகளில் முதல் நான்கும்  ஒரு பங்கும் பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும். முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு
பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து
இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை
பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில்
வைக்கவும்.

இந்த தீர்த்தப் பொடியை திரிகடி மூன்று விரல் அளவு எடுத்து ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும். இதனுடன்  வில்வம் , துளசி சேர்த்து
அருந்தலாம்.

இருதயம் இரைப்பை பலம் பெறும்,கண்கள்
சம்மந்தமான நோய்கள் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி,தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு,
மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல்,
மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள்
நீங்கும். சுத்த இரத்தம் பெருகும் .இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும்
வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து
முறையாகும். இது அனுபவத்தில் கை கண்ட
அரிய முறையாகும்.

ஆக இனியாவது நாம் ஆலயங்களில் தருகின்ற தீர்த்தத்தின் மருத்துவ குணங்களையும் பெருமைகளையும் புனிதத்தினையும் அறிந்து செயற்படுவோம்.
(வேதியன்)
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.