யாழில் வெடிமருந்துகள் மீட்பு

யாழ்.சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் சி4 வெடிமருந்து 1 கிலோ மற்றும் டெனேட்டர் 4  ஆகியவை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.


விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு யாழ்ப்பாணம்- கொழும்புத்துறை  சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையிலுள்ள பேருந்து தரிப்பிடத்திலிருந்து வெடிமருந்துகளை படையினர் மீட்டுள்ளனர்.

ஒரு கிலோ நிறையுடைய சி4 வெடிமருந்து 7 பொதிகள் மற்றும் டெனேட்டர் என அழைக்கப்படும் வெடி மருந்திற்குப் பயன்படுத்தப்படும் 4 குழாய்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியிலுள்ள மீனவர்கள், மீன்பிடிக்க எடுத்து செல்வதற்காக பஸ் தரிப்பிடத்தில் இந்த வெடிமருந்துகளை வைத்திருக்கலாமென விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட, வெடிபொருட்களை யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை யாழ்.பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த மாதமும் குறித்த பேருந்து தரிப்பிடத்திலிருந்து, ஒரு தொகை வெடிமருந்துகள் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.