30 வருட போருக்கு -இரு சாரா­ருக்கும் மொழி தெரி­யா­ததே கார­ணம்

30 வருட போருக்­கு இரு சாரா­ருக்­கும் மொழி தெரி­யா­ததே முக்­கிய கார­ணம். தென்­ப­கு­தில் உள்ள சிங்­கள மக்­க­ளுக்கு தமிழ்­மொழி தெரி­யாது.தமிழ் பேசும் மாவட்­டங்­க­ளில் உள்ள மக்­க­ளுக்கு சிங்­கள மொழி தெரி­யாது.இத­னா­லேயே பல்­வேறு பிரச்­சி­னை­கள் உரு­வா­க­வும் தீர்க்க முடி­யாத நிலை­யும் ஏற்­பட்­டது.


இந்த நிலை­யில் மாகாணக் கல்வி அமைச்­சி­னால் தமிழ் பேசும் அரச அலு­வ­லர்­க­ளுக்கு ஆரம்­ப­நிலை சிங்­கள அறி­வினை ஊட்­டு­வ­தற்­காக எடுக்­கப்­பட்ட முயற்சி பாராட்­டத்­தக்­கது இவ்­வாறு வடக்கு மாகாண ஆளு­நர் றெஜி­னோல்ட் குரே தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் மும்­மொ­ழக் கற்கை நிலை­யத்­தி­ன­ ரால் அரச அலு­வ­ல­கங்­க­ளில் கட­மை­யாற்­றும் அலு­வ­லர்­க­ளுக்கு நடத்­திய 50 மணி­நேர சிங்­க­ளப்­ப­யிற்சி வகுப்­புக்­க­ளில் கலந்து கொண்­ட­வர்­க­ளுக் குச் சான்­றி­தழ் வழங்­கும் நிகழ்வு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றது.
நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

‘‘மொழிக்­கல்வி பாட­சா­லை­க­ளில் ஊட்­டு­வது சிறந்­த­தென கரு­திய போதும் இங்­குள்ள பாட­சா­லை­க­ளில் சிங்­கள மொழி­யி­லான ஆசி­ரி­யர்­கள் இல்லை. இதே போன்று சிங்­கள மொழிப் பாட­சா­லை­க­ளில் தமிழ் மொழி போதிக்­கும் ஆசி­ரி­யா்­கள் இல்லை.இதனைக் கருத்­திற் கொண்டு முதற்­கட்­ட­மாக சிங்­கள மொழி தெரிந்த வள­வா­ளர்­க­ளி­னால் ஆரம்­ப­நிலை அரச அலு­வ­லர்­க­ளுக்கு பயிற்­சி­கள் வழங்­கப்­பட்­டன.

அவ்­வாறு தென்­ப­கு­தி­யில் உள்ள அரச அலு­வ­லர்­க­ளுக்குத் தமிழ் மொழிப் பயிற்­சி­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.நான் தென்­ப­கு­தி­யைச் சேர்ந்­த­வன் என்­ப­தால் வடக்கு மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­ட­ தும் தமிழ்­மொ­ழியை பயின்­ற­து­டன் இங்­குள்ள அலு­வ­லர்­கள் பொது மக்­கள் ஆகி­யோ­ரு­டன் தமி­ழில் கதைக்­கி­றேன்.பேசும் போது சில தவ­று­கள் காணப்­ப­டும் ஆனால் வெட்­கப்­ப­டா­மல் கதைப்­ப­தால் சில தவ­று­கள் சுட்­டிக் காட்­டப்­பட்டு இன்று உங்­கள் முன்­னால் தமி­ழில் உரை­யாற்­று­கி­றேன்.

இந்தப் ப­யிற்­சி­யினை பெற்­ற­வர் தொடர்ந்து ஏனை­யோ­ரு­டன் கதை­யுங்­கள் கதைக்­கா­மல் விட்­டால் பரீட்­சை­க­ளில் சித்­தி­ய­டைந்­தா­லும் பேசத் தெரி­யா­வி­டின் எவ்­வித பய­னு­மில்லை.உல­கில் உள்ள நாடு­க­ளில் மதம், மொழி,சாதி­யென பல்­வேறு வகை­யில் இருந்­தா­லும் அங்­குள்ள மக்­கள் தமது தாய் மொழி­யு­டன் அடுத்த மொழி­யை­யும் தெரிந்­தி­ருப்­பது பிரச்­சி­னை­கள் உரு­வா­கா­மல் தம்மை பாது­காக்க உத­வும்.

அடுத்த மொழியை தெளி­வ­றக் கற்­ப­வன் அந்த மொழி பேசும் அனை­வ­ருக்­கும் சமம் என்­னும் வாக்­கி­யத்­துக்கு அமைய இலங்கை குடி­மக்­க­ ளா­கிய நாம் அரச கரும மொழி­க­ளில் நன்கு பரீட்­சை­ய­மா­ன­வர்­க­ளா கத் திகழ வேண்­டும்’’– என்­றார்.

யாழ்ப்­பா­ணம் பெரி­ய­பு­லம் மகா வித்­தி­யா­ல­யம்,புத்­த­க­லட்டி பாட­சாலை ஆகிய எட்டு நிலை­யங்­க­ளில் நடத்­தப்­பட்ட பயிற்சி நெறி­க­ளில் பங்­கு­பற்­றிய 740 பேருக்கே சான்­றி­தழ்­கள் வழங்­கப்­பட்­டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.