பந்துலவின் சர்ச்சை கருத்திற்கு மஹேல வருத்தம்!

நாடாளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்தனவின் பரீட்சை முடிவுகள் தொடர்பிலான சர்ச்சை கருத்து வருத்தமளிப்பதாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.


2018 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையின் கலை பிரிவில் முதலாம் இடத்தை பிடித்த மாணவி தொடர்பில் பந்துல குணவர்தன சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக முதலாம் இடத்தை சர்வதேச பாடசாலை மாணவி ஒருவரே பெற்றுள்ளார். என்றும் அவர் சூழ்ச்சியின் மூலம் முதலாம் இடத்தை பிடித்துள்ளதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த கருத்து தொடர்பில் அவரது டுவிட்டரில் கருத்து தெரிவித்த மஹேல, “பந்துல குணவர்தவனின் கருத்து தொடர்பில் நான் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இலவசமாக அல்லது கட்டணம் செலுத்தி கல்வி பயின்றாலும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் எதிர்கால சந்ததியினரை தைரியப்படுத்த வேண்டும்.

சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். விசேடமாக அகில இலங்கை ரீதியில் 5 ஆம் இடத்தை பெற்ற மாணவிக்கு எனது வாழ்த்துக்கள். சிறப்பாக செயற்பட்டுள்ளீர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.