மீண்டும் மீண்டும் செப்பனிடப்படும் வீதி வீண்விரயமாவது யார் பணம்?

கரைச்சி பிரதேச சபையின் உருத்திரபுரம் வட்டாரத்திற்குட்பட்ட கூழாவடி சிவநகர் வீதி நான்கு
மாதங்களுக்கு முன்னர் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் அவசர அவசரமாக  செப்பனிடப்பட்டு தார் வீதியாக மாற்றப்பட்டது  இருப்பினும் ஒருசில நாட்களுக்குள் வீதி சேதமடைந்தது

இது தொடர்பில் கடந்தசில நாட்களுக்கு முன் சிவநகர் பகுதியில் மக்கள் சந்திப்புக்காக வருகை தந்த கரைச்சி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் சி.புவனேஸ்வரன் அவர்களிடம் குறித்த வீதி தொடர்பில் கலந்துரையாடிய போது குறித்த வீதி வேலைக்குரிய ஒப்பந்தகாருக்கான கொடுப்பனவை சபையில் பெரும் சர்ச்சையின் மத்தியில் ஆளும் தரப்பின் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி வாக்கெடுப்பின் மூலம் கொடுப்பனவுக்கான அங்கீகாரம் பெறப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்
பின்னர் அவர் குறித்த வீதி தொடர்பில் கடந்த பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தின் போதும் சுட்டிக் காட்டியிருந்தார் இந்நிலையில் இன்று அவசரமாக குறித்த வீதி மீண்டும் செப்பனிடப்பட்டு வருகிறது

இதற்கு பயன்படுத்தப்படுகிற நிதி யாருடையது மக்கள் பணமா?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.