மசாஜ் நிலையங்களுக்கு எதிராக- மக்கள்போராட்டம்!!
திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதி, அலஸ்தோட்டப் பகுதியை அண்டி அமைந்துள்ள மசாஜ் நிலையங்களுக்கு எதிராக, பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ‘மசாஜ் நிலையங்களை மூடு’, ‘சமூகச் சீர்கேடுகளை இல்லாமல் ஒழி’ உடற்பிடிப்பு நிலையங்களா உடலை விற்கும் நிலையங்களா’ உங்களுக்கு பணம் வேண்டும் ஆனால் எங்களுக்கு சீரழியாத கலாச்சார கிராமம் வேண்டு:ம்’ போன்ற பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவிலான மசாஜ் நிலையங்கள் காணப்படுவதாகவும், அதனால் சமூகச் சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
அலஸ்தோட்டம் அபிவிருத்தி மகளிர் சங்கம், ஸ்ரீ நாகம்மாள் ஆலய நிர்வாக சபை, ஸ்ரீ நாகம்மாள் ஆலய அறநெறிப் பாடசாலை, அலஸ்தோட்டம் இளைஞர் அணி ஆகியோர்கள் இணைந்து, இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
உப்புவெளி பிரதேச சபைச் செயலாளர், பிரதேச சபையின் உப தலைவர், உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்கள் கலைந்து சென்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை