தமிழகத்தின் மிகப் பெரிய சதுப்புநிலக் காடுகள்... அலையாத்தி..!

தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகள் என்றால் அது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் தான். இதன் மொத்த பரப்பளவு 119 கிலோ மீட்டர் ஆகும். முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளைவிட 10 மடங்கு பெரியதாக உள்ளது.


தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாங்குரோவ் காடுகள் இவை என்றால் அது முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள் தான். அலையாத்தி காடுகள் கடலில் ஏற்படும் அலையின் சீற்றத்தை ஆற்றுவதால், இக்காடுகளுக்கு அலையாத்தி என்று பெயரிடப்பட்டது. கடல் அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தி நிலத்தைக் காப்பதால் தான் அலையாத்திக்காடுகள் என்கின்றனர். ஆங்கிலத்தில் இவை மாங்குரோவ் காடுகள் என்கின்றனர்.


 இக்காடுகளுக்கு வெள்ளக்காடு என்ற பெயரும் உண்டு. அலையாத்தியின் சிறப்பு தன்மை அதன் சுவாச வேர்களாகும். பூமிக்குள் இருக்கும் வேர்களில் இருந்து ஆயிரக்கணக்கான சிறு ஈட்டி போன்ற வேர்கள் பூமியை துளைத்து மேல் நோக்கி வளரும் தன்மையுடையது. அலையாத்தி மரங்கள் தன் உடலில் சேரும் அதிகப்படியான உப்பினை இலையில் சேர்த்துவைத்து, பின்னர் அந்த இலையை உதிரச்செய்து ஒளியேற்றம் செய்கின்றன. புவியியல் அமைப்பில் முக்கியமான ஈரப்பத நிலப்பகுதியாக முத்துபேட்டை அலையாத்தி காடுகள் குறிப்பிடப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஜனவரி வரையில் அதிக எண்ணிக்கையிலானப் பறவைகள் சைபீரியா, மத்திய ஆசியா, ரஷ்யாவின் வடபகுதி மற்றும் ஐரோப்பா போன்ற உலகின் பல பகுதிகளில் இருந்து வருகின்றன. சுனாமி பேரலையில் இருந்து முத்துப்பேட்டையை காப்பாற்றியது அலையாத்தி காடுகள்தான். திருவாரூர் மாவட்டத்தை இயற்கை சீற்றங்களில் இருந்து காக்க கூடிய அரணாகவும் அலையாத்திக் காடுகள் உள்ளன.

சாம்புவானோடை படகு துறையில் இருந்து இருபுறமும் அலையாத்தி மரங்களை கொண்ட நீர்ப் பாதையில் சுமார் 6 கிமீ தூரத்தை கடந்தால் கடல் முகத்துவாரத்தைக் காணமுடியும். இப்பாதையில் ஏராளமான திட்டுகள் குட்டித் தீவுகளாகக் காட்சி அளிக்கின்றன. இந்த அலையாத்தி காடுகள், வாழ்வாதாரம் கடலோர பாதுகாப்புகள் நில சீரமைப்பை ஊக்குவிக்கிறது. சுற்றுச்சூழல் அமைப்பு, மண் வங்கிகள், காற்று, அலை மற்றும் அலை ஆற்றலை கட்டுப்படுத்துகிறது.

வேறு எந்த சதுப்பு நிலக் காடுகளில் இல்லாத அளவிற்க்கு 160 மீட்டர் நீளத்திற்கு மரத்திலான நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஓய்வரைகளும் மற்றும் சதுப்பு நிலக் காடுகளைக் காணும் வகையில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பூநாரை,செங்கால் நாரை, சிறவி, நீர்க்காகம் கொக்கு, மீன்கொத்தி, நாரை போன்ற அழியும் தறுவாயில் உள்ள நீர்ப்பறவைகளும் உள்ளன.

முத்துப்பேட்டை நில பறவைகளான பருந்து, சிவப்பு வளைய பச்சைக் கிளிகள் மற்றும் புள்ளி புறா வகைகள் உள்ளன. முத்துப் பேட்டை சதுப்பு நிலக்காடுகளில் பாலூட்டி வகைகளான காட்டுப் பூனைகள், குறுகிய மூக்கு உள்ள பூசந்தின்னி வெளவ்வால்கள் காணப்படுகின்றன. நீங்கள் அலையாத்தி காடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால், முத்துப்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்று தனியார் மீன்பிடி படகுகள் மூலம் அலையாத்திக் காடுகளுக்குச் செல்லலாம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.