அமெரிக்காவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் பீகன் பர்க் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 5 போலீசாரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.


இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து உடன் இருந்த சக போலீசார் தாக்குதல் நடத்திய 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பாலியானார்கள். அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த போலீசார் 5 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச்சூடுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.