விடுதலை வரலாற்றில் யாழ். பல்கலைக்கழகம் ஒரு மாபெரும் சக்தியே!!
யாழ் பல்கலைக்கழக மாணவா்கள் கடந்த காலங்களில் ஆற்றிய பங்களிப்பு என்பது மிகச்சிறப்பானதும் முனைப்பு மிக்கதுமாகும். தொடரும் இவ் உந்துசக்தியானது மிகப்பலமானதாகும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஜெனிவாவை வலியுறுத்தி இன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் நடத்திய மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
பின்னர் கேப்பாப்பிலவில் நில மீட்புக்காக போராடும் மக்களைச் சந்தித்து கலந்துரையாடிய பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் நாட்களில் கேப்பாப்பிலவு மக்கள் நடத்தவுள்ள ‘காணிக்கு போக சுதந்திரமில்லை‘ போராட்டத்துக்கும் தமது ஆதரவை வழங்கத்தீர்மானித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை