மட்டு. மேல்.நீதிமன்றம் தீர்ப்பு! மரண தண்டனை!!

கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட எதிரிக்கு மரணதண்டனை விதித்து மட்டக்களப்பு மேல்.நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மட்டக்களப்பு திறைந்துறைசேனை பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டவருக்கே மட்டக்களப்பு மேல்.நீதிமன்ற நீதிபதி இர்ஸதீன் இவ்வாறு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.

இவ்வழக்கு விசாரணைகளை சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் நெறிப்படுத்தியிருந்தார்.

அரச தரப்பு சாட்சியங்களாக இவ் வழக்கில் இரண்டு நேரடி சாட்சியங்களாகவும் சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியம் மற்றும் சூழ்நிலை சாட்சியங்களாக 14 சாட்சியங்கள் வழக்கு தொடுநர் தரப்பால் நெறிப்படுத்தப்பட்டிருந்தது.

நேரடி சாட்சியங்கள், குறித்த வழக்கின் எதிரியான முகமது நஸீர் என்பவர் சம்பவ தினத்தன்று மாலை கடையில் நின்றிருந்த அஸ்ரப் என்பவரை கத்தியால் கழுத்து மற்றும் கையில் வெட்டியதாக சாட்சியமளித்திருந்தனர்.

பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த எதிரியின் வாக்குமூலத்திற்கு அமைய மீட்கப்பட்ட கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியினையும் நேரடி சாட்சியங்கள் அடையாளம் காட்டியிருந்தனர்.

இதேவேளை கழுத்தில் குத்தப்பட்டதால் மூளையின் உட்புறத்தில் ஏற்பட்ட இரத்த பெருக்கே மரணம் நிகழக் காரணம் என சட்ட வைத்திய அதிகாரி மரண விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து சாட்சியமளித்திருந்தார்.

இவற்றினடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எதிரான குற்றங்கள் சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டமையால் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.