லண்டனில் இடம்பிடித்த இலங்கை உணவுகள் !!
BBC Good Food இணையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் இலங்கை உணவுகளுக்கு அதிக கோரிக்கை ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த உணவுகள் பட்டியலில் இலங்கை உணவு முன்னணி வகிப்பதாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை உணவுகளான அப்பம், கொத்துரொட்டி மற்றும் தேங்காய் சம்பல் போன்ற உணவுகளே பிரித்தானியாவில் அதிகம் பிரபலமடைந்துள்ளது.
லண்டன் நகரில் இலங்கை உணவு விற்பனை செய்யும் பல இடங்கள் காணப்படுகின்றது. அந்த உணவகங்கள் லண்டன் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்துள்ளது.
அந்த உணவகங்களில் பலவகையான உணவகள் BBC Good Food இணையத்தில் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் இலங்கை உணவு வகைகளும் இந்திய உணவாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது அவை இந்திய உணவாக கருதப்படுவதில்லை.
இலங்கை உணவுகளின் வித்தியாசத்தை அந்த மக்கள் அடையாளம் கண்டுபிடித்துள்ளதாக The Grocer என்ற பிரித்தானிய சஞ்சிகையின் உணவு தொடர்பான ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
BBC Good Food இணையத்தின் ஆய்விற்கமைய மியன்மார் நாட்டு உணவுகள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை