நீதிக்காய் திரளும் உறவுகள்!!

வடக்கு, கிழக்­கின் எட்டு மாவட்­டங்­க­ளை­யும் சேர்ந்த வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் இன்று வவு­னி­யா­வில் பெரும்ஆர்ப்­பாட்­டம் ஒன்றை நடத்­த­வுள்­ள­னர்.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விட­யம் தொடர்­பாக எதிர்­வ­ரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை அமர்­வில் நீதி­யான தீர்வு கிடைக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தியே இந்த ஆர்ப்­பாட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள், சிவில் அமைப்­பி­னர் இணைந்து இந்த ஆர்ப்­பாட்­டத்தை ஏற்­பாடு செய்­துள்­ள­னர்.

இந்­தப் ஆர்ப்­பாட்­டத்­துக்கு அனை­வ­ரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டும். சிவில் சமூ­கத்­தி­னர், மக்­கள் பிர­தி­நி­தி­கள், அமைப்­புக்­கள் அனை­வ­ரும் போராட்­டத்­தில் பங்­கேற்க வேண்­டும்.

எமக்கு ஆத­ரவு தந்து நீண்டு செல்­கின்ற இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்­வைப் பெற அனை­வ­ரும் ஒத்­து­ழைக்க வேண்­டும் என்று காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­னர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.