ஏமனில் இரண்டுகோடி மக்கள் உணவில்லாமல் தவிப்பு!

ஏமனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படும் உணவை ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் அபகரிப்பதாக உலக
உணவு திட்ட அமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு அனுப்பப்படும் உணவுவினியோக பாதையை மாற்றும் செயலை ஹித்தி குழு நிறுத்த வேண்டுமென மேற்படி அமைப்பு கோரியுள்ளது.

தலைநகர் சானாவில் ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வு ஒன்றில் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட உணவை இன்னமும் பெற்றுக்கொள்ளாத நிலைமை அவதானிப்பட்டதையடுத்து உலக உணவு திட்ட அமைப்பின் விசனம் வெளிப்பட்டுள்ளது.

ஏமனில் ஏறக்குறைய 2 கோடி பேர் உணவு பஞ்சத்தால் தவிப்பதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.