காரைநகர் - சாம்பலோடையில் இயற்கை வனமாக்கல் திட்டம்!

காரைநகர் சாம்பலோடைக் குளக்கரை மற்றும் அதை அண்டிய பிரதேசத்தை இயற்கை வனமாக்கி பசுமையாக்கும் நோக்கத்துடன் காரைநகர் சைவ மகா சபை மரக் கன்றுகள் நடுகை செய்யும் பணியை முன்னெடுத்துள்ளது. காரைநகர் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துடன் இணைந்து இப்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இதன் ஆரம்ப நிகழ்வு புதுவருட தினமான கடந்த செவ்வாய்க்கிழமை காரைநகர் சைவ மகா சபைத் தலைவர் மருத்துவர் ப.நந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் காரைநகர் பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வீ.சிவகுமார், காரைநகர் பெரும்பாக உத்தியோகத்தர் எஸ்.கோகுலன், காரைநகர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ந.பொன்ராசா, கு.திருச்செல்வம், ச.பாஸ்கரகுரு, ப.தவராசா, இயற்கை ஆர்வலர்களான ப.சிவானந்தராசா, வண.சோமாஸ்கந்தக் குருக்கள் மற்றும் இளம் விவசாயிகள் கழகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அன்றைய தினம் சுமார் 100 வரையான மரக் கன்றுகள் நடுகை செய்யப்பட்டன. தொடர்ந்தும் மரக் கன்றுகள் நடுகை செய்யப்படும் என காரைநகர் சைவ மகா சபை தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.