வெளியேறு- வவுனியாவில் பெரும் போராட்டம்!
இராணுவ வசமுள்ள விவசாய நிலங்களை விடுவிக்குமாறு கோரி, செட்டிகுளம் பிரதேச
செயலகத்திற்குட்பட்ட ஆண்டியா புளியங்குளம் இராமியன்குளம் மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமன்னார், மதவாச்சி முதன்மை வீதியில் இராமியன்குளம் பகுதியில் ஆர்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ”இராணுவம் நாட்டை பாதுகாப்பதற்கா எமது காணியில் விவசாயம் செய்வதற்கா, அகதிகளிற்கு இடம்கொடுத்தோம் நாம் அகதிகளாகினோம், சொந்தநிலத்தில் வாழவிடு, ராணுவமே வெளியேறு போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்
இறுதியில் செட்டிகுளம் பிரதேச செயலார் க.சிவகரனிடம் மனுக் கையளித்தனர்.








.jpeg
)





கருத்துகள் இல்லை